Published : 30 Mar 2020 05:13 PM
Last Updated : 30 Mar 2020 05:13 PM

பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 25 கோடி: பதஞ்சலி நிறுவனம் அறிவிப்பு

புதுடெல்லி

கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவுவதற்காக பிரதமர் நிவாரண நிதிக்கு பதஞ்சலி நிறுவனத்தின் சார்பில் 25 கோடி ரூபாய் வழங்குவதாக யோகா குரு பாபா ராம்தேவ் அறிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸுக்கு 900-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர். 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்திருப்பதால், இந்தியா முழுவதும் அத்தியாவசிய பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணிகளுமே நடக்கவில்லை.

இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான செலவுகள் என பல்வேறு சிக்கல்களில் தற்போது இந்தியா சிக்கியுள்ளது. இதனைச் சமாளிக்க PM CARES Fund-க்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் மோடி தனது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு மூலமாக ட்வீட் செய்தார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி அறிவித்த வங்கிக் கணக்கிற்குப் பலரும் நிதியுதவி அளிக்கத் தொடங்கினர். பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து, தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள் என உதவிகள் செய்யத் தொடங்கியுள்ளனர்.

இதனையடுத்து கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவுவதற்காக பிரதமர் நிவாரண நிதிக்கு பதஞ்சலி நிறுவனம்25 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது. பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் யோகா குரு பாபா ராம்தேவ் இதனை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x