Published : 26 Mar 2020 04:55 PM
Last Updated : 26 Mar 2020 04:55 PM
மும்பை பங்குச் சந்தையில் 1410 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டெண் 29946 -ஆக உயர்ந்தது. அதேபோல் தேசியப் பங்குச் சந்தையில் 323 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டெண் 8641 ஆக உயர்ந்தது.
கரோனோ வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகிற நிலையில், அபாய சூழலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பிரமதர் நரேந்திர மோடி, 21 நாட்கள் ஊரடங்கை நேற்று முன் தினம் பிறப்பித்தார். கரோனா சிகிச்சைக்கான கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு ரூ.15,000 கோடி அளவில் நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார்.
அதைத் தொடர்ந்தே நேற்றைய பங்குச் சந்தையில் குறிப்பிடத்தக்க அளவில் ஏற்றம் காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் 1,861.75 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டெண் 28,535.78-ஆக உயர்ந்தது. அதேபோல் தேசியப் பங்குச் சந்தையில் 516.80 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டெண் 8,317.85-ஆக உயர்ந்தது.
மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையில் 7 சதவீதம் அளவிலும், தேசியப் பங்குச் சந்தையில் 6.62 சதவீதம் அளவிலும் ஏற்றம் காணப்பட்டது.
தற்போதைய சூழலில் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் கடும் முடக்கத்தை எதிர்கொண்டுள்ளன. இதனால் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சாதாரண மக்களுக்கான சலுகைகள், ஏழைகள் மற்றும் தொழிலாளர்களுக்கான சலுகைகள் என பல அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார்.
ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, ஜவுளி நிறுவனங்கள் தற்போதைய சூழலை மனதில் கொண்டு எந்த சரக்குகளையும் ரத்து செய்ய வேண்டாம். அரசு உங்களோடு இருக்கிறது. தேவையான உதவிகள் திட்டமிடப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகளால் பங்குச்சந்தைகளில் சற்று ஏற்றம் தொடங்கியுள்ளது. பெரும் சரிவில் இருந்து மீளும் நிலையை நோக்கிச் செல்கிறது. இதனால் இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் ஏற்றத்தை கண்டுள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் 1410 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டெண் 29946 -ஆக உயர்ந்தது. அதேபோல் தேசியப் பங்குச் சந்தையில் 323 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டெண் 8641-ஆக உயர்ந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT