Published : 26 Mar 2020 04:31 PM
Last Updated : 26 Mar 2020 04:31 PM
ஏழைகள் மற்றும் தொழிலாளர்களுக்கான சலுகைகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அடுத்தகட்டமாக சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு நிதித் திட்டத்தை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவால் ஏழைத் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்துள்ளனர்.
அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. யாரும் பசியுடன் இருக்கக் கூடாது. எனவே வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு நிதித் திட்டம் அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் இலவச அரிசி, பருப்பு, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ. 2 ஆயிரம் நிதி, விவசாயிகளுக்கு நிதியுதவி என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இதுபற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில் ‘‘தொழிலாளர்களை தொடர்ந்து சிறு மற்றும் குழு தொழில் நிறுவனங்களின் பிரச்சினைகளை தீர்ப்பது பற்றி ஆலோசித்து வருகிறோம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.
கார்பரேட் வரி மற்றும் ஜிஎஸ்டி வரி செலுத்துதலை நிறுத்தி வைத்தல், கடனுக்கான வட்டியை செலுத்த கூடுதல் கால அவகாசம், வட்டி விகிதத்தை குறைத்தல், திவாலாகும் நிறுவனங்கள் குறித்த அறிவிப்பை தள்ளிபோடுதல் உள்ளிட்ட எதிர்பார்ப்புகள் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களிடம் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT