Last Updated : 30 Aug, 2015 12:42 PM

 

Published : 30 Aug 2015 12:42 PM
Last Updated : 30 Aug 2015 12:42 PM

மளிகைக் கடைகள்தான் எங்களுக்கு போட்டி.. - பிக்பாஸ்கட் நிறுவன தலைவர் வி.எஸ்.சுதாகர் நேர்காணல்

ஆன்லைனில் என்ன வாங்கமுடியும் என்ற கேட்பதை விட என்னவெல்லாம் வாங்கமுடியாது என்பதை எளிதாக சொல்லிவிடலாம். இப்போது மளிகை பொருட்கள் வரை ஆன்லைனில் வாங்கமுடியும். பிக்பாஸ்கட் நிறுவனம் சமீபத்தில் சென்னையில் தன்னுடைய கிளையைத் தொடங்கியது. 2011-ம் ஆண்டு பெங்களூருவில் தொடங்கப்பட்ட நிறுவனம் இப்போது ஆறு நகரங்களில் செயல்படுகிறது. இதன் நிறுவனர்களில் ஒருவரும் தலைவருமான வி.எஸ்.சுதாகரை பெங்களூருவில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். அந்த விரிவான உரையாடலில் இருந்து..

வேலுரில் பிறந்தவர். அலகா பாத்தில் உள்ள என்.ஐ.டியிலும், ஐஐஎம் அகமதாபாத்திலும் படித் தவர். 1999-ம் ஆண்டே பேப்மார்ட் என்னும் ரீடெய்ல் பிரிவில் செயல் படும் இ-காமர்ஸ் ஆரம்பித்தார். அது தோல்வியடைந்த பிறகு சில ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு முதலீட்டாளர்/ஆலோசகராக இருந்தவர். 2011-ம் ஆண்டு பிக்பாஸ்கட் நிறுவனத்தை ஐந்து நிறுவனர்களுடன் இணைந்து தொடங்கினார்.

பேப்மார்ட் நிறுவனம் ஏன் தோல்வி அடைந்தது?

நாங்கள் ஆரம்பித்தது 1999-ம் ஆண்டு. அப்போது இன்டர்நெட் என்பது அவ்வளவாக இல்லை. இன்டர்நெட் பயன்படுத்துபவர் களுக்கு கூட பலவிதமான பயம் இருந்தது. தவிர இப்போது போல கிரெடிட் கார்ட் வசதி அப்போது இல்லை என்பன போன்ற பல காரணங்களால் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை. முன்கூட்டியே சந்தையை கணிப்பதும் தவறுதான். அதன் பிறகு ஆன்லைனில் இருந்து ஆஃப்லைன் அதாவது பேப்மால் என்னும் ரீடெய்ல் நிறுவனம் தொடங்கினோம். சில காலங்களுக்கு பிறகு ஆதித்யா பிர்லா குழுமத்திடம் விற்றுவிட்டோம். 2011-ம் ஆண்டு என்னுடைய நண்பர் கே.கணேஷ் இப்போது இதற்கான நேரம் கணித்துவிட்டது ஆரம்பிக்கலாம் என்று சொல்லி கொஞ்சம் முதலீடு செய்தார். அதன் பிறகு நண்பர்களுடன் சேர்ந்து நிறுவனத்தை தொடங்கிவிட்டோம்.

20 ரூபாய்க்கு கூட டெலிவரி செய் கிறீர்களே? மக்கள் தவறாக பயன் படுத்த வாய்ப்பு இருக்கிறதில் லையா?

எங்களுக்கு இப்போதும் 20 ரூபாய்க்கு கூட ஆர்டர்கள் வருகிறது. 1000 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கும் போது இலவச டெலிவரி செய்வதினால், எங்களுக்கு வரும் ஆர்டர்களில் 80 சதவீதத்துக்கும் மேல் 1,000 ரூபாய்க்கு மேல்தான் வருகிறது. ஒரு முறை 20 ரூபாய்க்கு ஆர்டர் செய்து பார்ப்பார்கள். சரியாக வருகிறதா என்பதை தெரிந்த பிறகு தேவையானதை வாங்கிக்கொள்வார்கள். அடிக்கடி 20 ரூபாய்க்கு ஆர்டர் செய்யும் மக்கள் அதிகமாக இல்லை. ஒரு வேளை 20 ரூபாய் என்பதை 500 ரூபாய் என்பதாக வைத்தால் எங்களுக்கு வரும் ஆர்டகள் கணிசமாக குறைய வாய்ப்பு இருக்கிறது.

ஆரம்பத்தில் பேப்மார்ட் வைத்திருந்த போது நகைகளை கூட ஆன்லைனில் விற்பனை செய் தோம். அப்போது, பிடிக்கவில்லை என்றால் திருப்பிக் கொடுங்கள் என்று அறிவித்தோம். பலர், கல்யாண சீசனில் ஆர்டர் செய்து நகையை போட்டு விட்டு அதன் பிறகு திருப்பி கொடுப்பார்கள் என்று எச்சரிக்கை செய்தார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்க வில்லை பெரும்பாலான மக்கள் ஏமாற்ற நினைப்பதில்லை.

ஆன்லைனில் மளிகை என்பது நகரங்களில் வசிக்கக்கூடிய குறிப்பாக மேல்தட்டு மக்களுக்கு கொடுக்க முடிகிற சேவை அல்லவா?

பெங்களூருவில் தோராயமாக 2,000 கோடி ரூபாய் அளவுக்கு ரீடெய்ல் துறையில் வியாபாரம் நடக்கிறது. அனைத்தையும் நாமே எடுத்துக்கொள்ள முடியாது. அதே போல அனைத்து தரப்பு மக்களுக் கும் இந்த சேவையை இப்போ தைக்கு கொடுக்க முடியாது. கம்ப்யூட்டர் இருந்த இடத்தில் இப்போது ஸ்மார்ட்போன் வந்து விட்டது. அங்கு பணக்காரர் களுக்கும் ஏழைகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. சிறு நகரங்களில் கிராமங்களில் கூட ஸ்மார்ட்போன் இருக்கிறது. ஸ்மார்ட்போனில் ஒரு கிளிக். அவ்வளவுதான்.

ஆனால் அனைத்து சிறு நகரங் களுக்கும் இப்போதைக்கு விரிவு படுத்த முடியுமா என்று தெரிய வில்லை. திருச்சி, மதுரை ஆகிய நகரங்களுக்கு இந்த சேவையை கொண்டு செல்ல திட்டமிட்டிருக்கிறோம். வருங்காலத்தில் இதைவிட சிறிய நகரங்களுக்கு செல்லலாம். இப்போதைக்கு எங்களிடம் 15,000 பொருட்கள் இருக்கிறது. சிறிய நகரங்களுக்கு செல்லும் போது அத்தியாவசிய பொருட்களை மட்டும் விற்பனை செய்யலாம்.

இ-காமர்ஸ் என்றாலே அனைவருக் கும் தள்ளுபடிதான் நினைவுக்கு வரும். ஆனால் நீங்கள் தள்ளுபடி ஏதும் கொடுக்கவில்லையே?

ஒவ்வொரு மாதமும் வாங்க வேண்டிய பொருட்கள் என்பதால் பிக்பாஸ்கட் ஆரம்பிக்கும் போது பலர் கூடுதலாக கட்டணம் வசூலிப் பீர்களா என்று கேட்டார்கள். கார ணம் பெரும்பாலான மக்களுக்கு மளிகை பொருட்கள் வாங்குவது என்பது ஒரு பெரிய வேலை. தள்ளுபடி கொடுக்கவில்லையே தவிர, வாடிக்கையாளர்களுக்கு தேவையான சேவையை வழங்கு கிறோம். இப்போதைக்கு பொருட் கள் விற்பதினால் எங்களுக்கு நஷ்டம் இல்லை. விரிவாக்க பணிகளில் ஈடுபட்டிருப்பதால் இன்னும் சில காலத்துக்கு பிரேக் ஈவன் பற்றிய எண்ணம் இல்லை.

ஆரம்பிக்கும் போது ஆன்லைனில் ஆரம்பித்து ஆப்லைனுக்கு (ஷோரூம்) சென்றீர்கள். இப்போது அதுபோல திட்டம் இருக்கிறதா?

ஷோரூம் போல ஆரம்பிக்கும் திட்டம் இல்லை. ஆனால் வாடிக்கை யாளர்களுக்கு சேவை கொடுப் பதற்காக பல சிறிய கடைகளை எங்களுடன் இணைத்து வரு கிறோம்.

பலர் நகை கடைக்கு அதிகம் செல்ல முடியாது. எலெக்ட்ரானிக் கடைகளுக்கு அதிகம் செல்ல முடியாது. மக்களுக்கு தற்போதை முக்கியமான பொழுதுபோக்கே சூப்பர் மார்கெட்டுகளுக்கு சென்று பொருள் வாங்குவதுதான். இப் போது உங்களிடம் வாங்கினாலும், வாடிக்கையாளர்கள் மீண்டும் கடை களுக்கு செல்ல மாட்டார்களா?

மளிகை என்பது ஒரே நாளில் வாங்குவது அல்ல. ஒரு மாதத்தில் குறைந்தபட்சம் 4 முறையாவது மளிகை கடைக்கு செல்ல வேண்டி இருக்கும். இரண்டு முறை கூட எங்களிடம் வரட்டுமே.

தரமான பொருட்களை சிறந்த முறையில் கொடுப்பதி னால் வாடிக்கையாளர்கள் எங்கும் செல்ல மாட்டார்கள். கொடுக்கும் பணத்துக்கு சரியான சேவை கிடைக்கிறதா என்பதைதான் வாடிக்கையாளர்கள் விரும்பு கிறார்கள்.

உங்களை போன்றே பல நிறுவனங்களும் களம் இறங்கி இருக்கின்றனவே. போட்டி எப்படி இருக்கிறது?

எங்களை போன்று பல ஆன் லைன் நிறுவனங்கள் இருந்தாலும் ஆப்லைன் (ரீடெய்ல்,மளிகை கடைகள்) நிறுவனங்கள்தான் எங்க ளுக்கு போட்டியே. ஆன்லைன் நிறுவனம் ஆரம்பிக்க பெரிய நெட்வொர்க், டெக்னாலஜி வேண் டும்.

karthikeyan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x