Published : 12 Mar 2020 09:27 AM
Last Updated : 12 Mar 2020 09:27 AM
இந்தியாவில் இந்த ஆண்டு மார்ச்1-ம் தேதி வரை பதிவு செய்யப்பட்டுள்ள ஸ்டார்ட்-அப்களின் எண்ணிக்கை 28,979 என்று மத்திய தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
மக்களவையில் எழுத்து மூலமாக அளித்த பதிலில், ஸ்டார்ட்- அப்கள் அதிக எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலத்தில் (5,477) உள்ளதாகக் குறிப்பிட்டார். இதற்குஅடுத்தபடியாக கர்நாடகா (4,206),டெல்லி (3,740), உத்தரப் பிரதேசம்(2,342), ஹரியாணா (1,635), தெலுங்கானா (1,609), குஜராத் 1,555), தமிழ்நாடு (1,509) உள்ளிட்டமாநிலங்களில் ஸ்டார்ட் அப்கள்செயல்படுவதாகக் குறிப்பிட்டார்.
ஸ்டார்ட் - அப்களுக்கு சிலவரிச் சலுகைகள் அளிக்கப்படுவதாகவும் மார்ச் மாத நிலவரப்படி 3,37,335 பேருக்கு ஸ்டார்ட் அப்கள் மூலம் வேலை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் ஸ்டார்ட் - அப்களை ஊக்குவிப்பதற்காக 14-வதுமற்றும் 15-வது நிதிக் குழு ரூ.10 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
செபி-யில் பதிவு செய்யப்பட்ட மாற்று முதலீட்டு நிதியம் மூலம்ரூ.3,123 கோடி நிதி 47 நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பேச்சு வார்த்தையில் இந்தியா திறந்த மனதுடன் பேச்சு நடத்துவதாகவும் உள்நாட்டு தொழில் நிறுவனங்களை கருத்தில் கொண்டுதான் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும்மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் கோயல் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT