Published : 07 Mar 2020 10:08 AM
Last Updated : 07 Mar 2020 10:08 AM
நிதி நெருக்கடியில் சிக்கி தத்தளிக்கும் எஸ் வங்கியை ஆர்பிஐ தன் கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் வாடிக்கையாளர்களின் நிதியை பாதுகாக்கும் முகமாக மத்திய ரிசர்வ் வங்கி வரைவு மறுகட்டுமான திட்டத்தை அறிவித்துள்ளது.
அதாவது ஸ்டேட் வங்கி முதலீட்டாளராகிறது. எஸ். வங்கியின் ஊழியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட சேவை நிபந்தனைகளில் எந்த வித மாற்றமும் இல்லை. அதாவது குறைந்தது ஓராண்டுக்கு ஊழியர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
ஆனால் முக்கிய மேலாண்மை பொறுப்புகள் குறித்து போர்டுதான் முடிவெடுக்கும். வரைவு மறுகட்டுமான திட்டத்தின் படி வங்கியின் அதிகாரப்பூர்வ மூலதனம் ரூ.5000 கோடியாகும். மொத்தம் 2400 கோடி பங்குகள், பங்கு ஒன்றின் விலை ரூ.2 என்பதன் மூலம் ரூ.4,800 கோடி மூலதனம். இதில் 49% பங்குகளை ஸ்டேட் வங்கி வாங்குகிறது.
மேலும் 3 ஆண்டுகள் நிறைவடைவதற்குள் எஸ்.பி.ஐ. தங்கள் பங்குகளை எஸ் வங்கியில் 26%-க்குக் கீழ் குறைக்க முடியாது என்கிறது ஆர்பிஐ. எஸ்.பி.ஐ. ரூ.2,450 கோடி முதலீடு செய்கிறது.
புதிய போர்டும் உருவாக்கப்படுகிறது, இதில் ஒரு நிர்வாக இயக்குநர், சி.இ.ஓ மற்றும் சேர்மன், 2 செயல்முறையல்லாத இயக்குநர்கள் என்று குறைந்தது 6 பேர் இந்த போர்டில் இருப்பார்கள். 2 இயக்குநர்களை எஸ்பிஐ நியமிக்கும். போர்டு உறுப்பினர்கள் ஓராண்டுக்கு பதவி வகிப்பார்கள்.
எஸ் வங்கியின் அனைத்து டெபாசிட்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை பொறுத்தவரை ஏற்கெனவே உள்ள நடைமுறை தொடரும், புதிய திட்டம் அதில் தாக்கம் செலுத்தாது.
ஆர்பிஐயின் வரைவு மறுகட்டுமானத் திட்டங்கள் குறித்து கருத்துக்கள் வரவேற்கப்பட்டுள்ளன, அதன் பிறகு ஆர்பிஐ இறுதி முடிவை வெளியிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT