Last Updated : 06 Feb, 2020 09:58 AM

 

Published : 06 Feb 2020 09:58 AM
Last Updated : 06 Feb 2020 09:58 AM

வாகனக் கண்காட்சியில் குவியும் எஸ்யுவி, எலெக்ட்ரிக் கார்கள்

2020ம் ஆண்டின் ஆட்டோமொபைல் கண்காட்சி புதுடெல்லி கிரேட்டர் நொய்டாவில் நடந்துவருகிறது. இந்தக் கண்காட்சியில் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுடைய புதியமாடல்களையும், மேம்படுத்தப்பட்ட மாடல்களையும் அறிமுகம்செய்து வருகின்றன.

ஆட்டோமொபைல் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்படும் மாடல்களில் எஸ்யுவிகளும், எலெக்ட்ரிக் மாடல் கார்களும் அதிகமாக இடம்பெற்றுள்ளன என்பது இக்கண்காட்சியின் குறிப்பிடத்தக்க அம்சம். இந்தியாவில் வருமானம் ஈட்டுவோரின்எண்ணிக்கை அதிகரித்துவருவதால் வாகனத் தேவையும் அதிகரித்துவருகிறது. மேலும் பெரும்பாலானோர் புதிய தொழில்நுட்பம், அதிக வசதிகள், துடிப்பான டிசைன் கொண்ட மாடல்களை விரும்புகிறார்கள். இவற்றை பூர்த்தி செய்யும் வகையில் எஸ்யுவி மாடல்கள் திகழ்கின்றன. எனவே ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எஸ்யுவி மாடல்களில் அதிகம் கவனம் செலுத்திவருகின்றன. மேலும் எதிர்காலம் எலெக்ட்ரிக் சந்தையாக இருக்கலாம் என்றவிதத்தில் எலெக்ட்ரிக் மாடல்களையும் அதிகமாக அறிமுகம் செய்கின்றன.

இந்தக் கண்காட்சியில் ஃபோக்ஸ்வேகன் தனது மூன்று எஸ்யுவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. டைகுன், டிகுவான் ஆல்ஸ்பேஸ், டி-ராக் ஆகிய மூன்று மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. ஸ்கோடா தனது புதிய விஷன் இன் என்ற எஸ்யுவி மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியச் சந்தைக்காக இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டது ஆகும். எலெக்ட்ரிக் சந்தையில் தீவிரமாகக் களம் இறங்கும் நோக்கில் நெக்சான் இவி மாடலைசமீபத்தில் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது.

சியரா கான்செப்டையும் அல்ட்ரோஸ் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா அறிமுகம் செய்துள்ளது. கியா மோடார்ஸின் எதிர்பார்க்கப்பட்ட கார்னிவல் இந்தக் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

மாருதி சுசூகி தனது ஃபூச்சுரோ-இ மாடலையும், ஸ்விஃப்ட் மாடலின் ஹைபிரிட் வெர்ஷனையும் அறிமுகம் செய்துள்ளது. எம்ஜி மோட்டார்ஸ் தனதுமார்வெல் எக்ஸ் கனெக்டட் எஸ்யுவியை அறிமுகம் செய்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கேயுவி மாடலை அறிமுகம் செய்தது. அடுத்து வரும் நாட்களில் ஹுண்டாய் உள்ளிட்ட பிற நிறுவனங்களும் தங்களுடைய மாடல்களை அறிமுகம் செய்யவிருக்கின்றன.

30 நாடுகளைச் சேர்ந்த 31 பிராண்டுகள் இந்தக் கண்காட்சியில் கலந்துகொண்டுள்ளன. சீனாவைச் சேர்ந்த கிரேட் வால் மோட்டார்ஸ் இந்தக் கன்காட்சியின் மூலம் இந்தியாவில் கால்பதிக்க உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x