Published : 31 Jan 2020 09:12 PM
Last Updated : 31 Jan 2020 09:12 PM
இந்தியாவில் ஜிடிபி எனப்படும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கூடுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக எழுந்த விவாதங்களையடுத்து அவ்வாறு கூறப்படுவதற்கான வாதங்களில் தரவுகள் அடிப்படையில் ஆதாரங்கள் இல்லை என்று மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது
இது தொடர்பாக பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
முதலீட்டாளர்கள் மற்றும் கொள்கைகளை வகுப்போருக்கு முடிவுகளை எடுப்பதற்கு முக்கிய காரணியாக ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி உள்ளது. எனவே, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை மதிப்பிடுவதற்காக 2011-ம் ஆண்டில் திருத்தியமைக்கப்பட்ட வழிமுறை கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டின் துல்லியத்தன்மை குறித்து அண்மையில் மேற்கொள்ளப்படும் விவாதங்கள் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை மதிப்பீடு செய்வதில், நாடுகளுக்கு இடையே பல்வேறு கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு அல்லாத வழிமுறைகள், நாடுகளைத் தாண்டிய மதிப்பீடு ஆகியவற்றில் மாறுபாடுகள் உள்ளன. இதேபோல, மற்ற காரணிகளை பிரிவுபடுத்துவது, மறுஆய்வுக்கான வழிமுறைகளை மட்டும் தனிமைப்படுத்துவது ஆகியவையும் உள்ளன.
2011-ம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியாவில் பின்பற்றப்பட்ட வழிமுறைகள், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை 2.7% அளவுக்கு கூடுதலாக மதிப்பிட்டுள்ளன. 95—ல் 51 நாடுகளில் இதே காலகட்டத்தில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி தவறாக மதிப்பிடப்பட்டுள்ளன.
பிரிட்டன், ஜெர்மனி, சிங்கப்பூர் போன்ற பல்வேறு முன்னேறிய நாடுகள், முழுமையடையாத பொருளாதார கணக்கீட்டு மாதிரிகளை பின்பற்றி, தங்களது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை தவறாக மதிப்பிட்டுள்ளன.
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில், அனைத்து கண்காணிக்கப்படாத வேறுபாடுகள் மற்றும் மாறுபட்ட அளவீடுகள் சரியாக பின்பற்றப்பட்ட இந்தியா அல்லது மற்ற நாடுகளில் வளர்ச்சி தவறாக மதிப்பிடப்பட்டுள்ளதாக எந்த நாடுகளாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி தவறாக மதிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படும் கருத்துகளில் தரவுகள் அடிப்படையில் உண்மையில்லை, என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT