Published : 10 Jan 2020 08:19 AM
Last Updated : 10 Jan 2020 08:19 AM

ஈரான் - அமெரிக்கா போர் பதற்றம் தணிவு: மும்பை பங்குச் சந்தையில் 1.55 சதவீதம் உயர்வு

மும்பை

ஈரான் - அமெரிக்கா இடையிலான பிரச்சினையின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், நேற்று கச்சா எண்ணெயின் விலை சற்று குறைந்தது. இதைத் தொடர்ந்து உலகளாவிய பங்குச் சந்தைகளில் கடும் ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையில் 634 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 41,452-ஐ தொட்டது. அதேபோல், தேசிய பங்குச் சந்தையிலும் குறிப்பிடத்தக்க அளவில் எழுச்சி காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தையில் 190 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 12,215-ஐ தொட்டது. மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையில் 1.55 சதவீத அளவிலும், தேசிய பங்குச் சந்தையில் 1.58 சதவீதம் அளவிலும் ஏற்றம் காணப்பட்டது. ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இந்த் வங்கி, எஸ்பிஐ ஆகியவற்றின் பங்குகள் 3% முதல் 4% வரை ஏற் றம் கண்டன. அதேபோல் ஆக்ஸிஸ் வங்கி, எம் அண்ட் எம், மாருதி, பஜாஜ் பைனான்ஸ், எல் அண்ட் டி, ஆசியன் பெயின்ட்ஸ் ஆகிய நிறு வனங்களின் பங்குகள் 2% முதல் 3% வரையில் எழுச்சி கண்டன.

எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் ஆகியவற்றின் பங்குகள் 2 சதவீதம் அளவிலும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசனின் பங்கு மதிப்பு 4.28 சதவீதம் அளவிலும் உயர்ந்தன.

ஈரான் - அமெரிக்கா இடையே போர் பதற்றம் ஏற்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெயின் விலை 4 சதவீதம் அளவில் உயர்ந்தது. இந்நிலையில் இரு நாடுகளிடையேயான போர் சூழலின் தீவிரம் குறைந்துள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலையில், சரிவு ஏற்பட்டுள்ளது. அதேபோல், கடந்த 5 தினங்களாக உச்சத்தை தொட்டிருந்த தங்கத்தின் மதிப்பு நேற்றைய தினம் சவரனுக்கு ரூ.736 குறைந்து ரூ,30,440-க்கு விற்பனையானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x