Published : 31 Dec 2019 08:38 AM
Last Updated : 31 Dec 2019 08:38 AM
இந்தியா 2026-ம் ஆண்டில் 4-வது பெரிய பொருளாதார நாடாக வளரும் எனவும் ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்த இடத்தைப் பிடிக்கும் என்று இங்கிலாந்தைச் சேர்ந்த பொருளாதார வர்த்தக ஆய்வு மையம் (சிஇபிஆர்) வெளி யிட்ட அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
2034-ம் ஆண்டில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி 3-ம் இடத்துக்கு முன்னேறும் என்றும் அந்த அறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டில் இந்தியா 5 டிரில்லியன் பொருளாதார நாடாக உயர வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. ஆனால் இந்த இலக்கு 2026-ல் எட்டப்படும் என அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியா தற்போது பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளை பின்னுக்குத் தள்ளி 5-வது இடத்துக்கு 2019-ம் ஆண்டில் முன்னேறியுள்ளதாக குறிப்பிட்டுள் ளது. இந்த மையம் வெளியிட் டுள்ள உலக பொருளாதார பட்டி யல் 2020-ல் இந்த விவரங்கள் வெளியாகி உள்ளன. 3-ம் இடத் துக்கான போட்டி ஜப்பான், ஜெர்மனி, இந்தியா ஆகிய 3 நாடு களுக்கிடையே அடுத்த 15 ஆண்டு களுக்கு நீடிக்கும் என்றும் அறிக் கையில் சுட்டிக்காட்டப்பட் டுள்ளது.
பிரதமர் மோடி நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5 டிரில்லியன் டாலராக 2024-ல் உயரும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளார். அந்த இலக்கு 2026-ல் எட்டப்படும் என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
ஆனால் இந்த இலக்கை எட்டுவது தொடர்பாக பல்வேறு யூகங்கள், ஐயங்களும் எழுந் துள்ளன. தற்போது நிலவும் பொருளாதார தேக்க நிலை காரண மாக இலக்கை எட்ட முடியுமா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.
5 டிரில்லியன் டாலர் இலக் கானது தற்போதைய சூழலில் அவசியமற்ற கேள்வி என்று சமீபத் தில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி ரெங்கராஜன் குறிப் பிட்டிருந்தார்.
இருப்பினும் 2019-ம் ஆண்டு பொருளாதார நிலை இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை பின்னுக்குத் தள்ளி முன்னேறி யுள்ளதாக அறிக்கை தெரிவித் துள்ளது.
தற்போது இந்தியாவில் நிலவும் தேக்க நிலையானது முதலீடுகள் மற்றும் நுகர்வு குறைந்துள்ளதால் உருவானதாகும்.
சிஇபிஆர் அட்டவணை தயாரிப்புக்கு சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) வெளியிடும் அடிப்படை ஆதார புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு தயா ரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT