Published : 28 Dec 2019 09:55 AM
Last Updated : 28 Dec 2019 09:55 AM
எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் இரவு நேரங்களில் அந்த வங்கியின் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் போது ஓ.டி.பி. எண்ணைக் குறிப்பிட்டால்தான் பணம் எடுக்க முடியும்.
இந்த புதிய முறை வரும் 2020- ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வருவதாக எஸ்பிஐ வங்கி தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது
வாடிக்கையாளர்கள் இரவு நேரத்தில் கூடுதல் பாதுகாப்புடன் பணம் எடுக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் வங்கிக்கணக்குடன் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. வரும் அதைக் குறிப்பிட்டபின்தான் பணம் எடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிவங்கி இது தொடர்பாக பேஸ்புக்கில் பதிவு செய்து இருப்பதாவது:
எஸ்பிஐ வங்கி ஏ.டி.எம்.களில் வாடிக்கையாளர்கள் இரவு நேரத்தில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுப்பதாக இருந்தால் ஒ.டி.பி. குறிப்பிட வேண்டியது அவசியமாகும். அங்கீகரிக்கப்படாத அல்லது மோசடி பரிவர்த்தனைகளைக் குறைக்கும் நோக்கில் ஒ.டி.பி. அடிப்படையில் பணம் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஜனவரி முதல் இந்த வசதி நடைமுறைக்கு வருகிறது.
இரவு 8 மணி முதல் அடுத்த நாள் காலை 8 மணி வரையிலான 12 மணி நேரத்தில், ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.களில் அதன் வாடிக்கையாளர்கள் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுப்பதாக இருந்தால், அவர்கள் வங்கிக்கணக்குடன் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. வரும்.
அந்த எண்ணை ஏடிஎம் திரையில் த ஓ.டி.பி. எண்ணை அதில் குறிப்பிட வேண்டும். அதன் பிறகுதான் ஏ.டி.எம். எந்திரத்திலிருந்து பணம் வரும்.
அதேசமயம் எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்கள் மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும் போது இந்த வசதி பொருந்தாது. அதாவது எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களில் உள்ள ஓ.டி.பி. அடிப்படையிலான பணம் எடுக்கும் வசதி மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.களில் இருக்காது. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT