Published : 28 Dec 2019 09:31 AM
Last Updated : 28 Dec 2019 09:31 AM
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் டேபிள் டென்னிஸ் அணிகள் பிரிவுக்கான தகுதி சுற்று ஆட்டம் போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள கோன்டோமர் நகரில் வரும் ஜனவரி 22 முதல் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சரத் கமல், அந்தோனி அமல்ராஜ், மானவ் தாக்கர், ஹர்மீத் தேசாய், ஜி.சத்யன் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி பங்கேற்கிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான முதற்கட்ட பயிற்சி முகாம் சென்னை நேரு விளையாட்டரங்களில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்ற சரத் கமல், அந்தோனி அமல்ராஜ், ஹர்மீத் தேசாய் உள்ளிட்டோருக்கு முன்னாள் வீரரான கமலேஷ் மேத்தா பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
வீரர்களுடன் கலந்துரையாடிய கமலேஷ் மேத்தா நிறைய நுட்பங்கள், மூலோபாயங்களை பயிற்றுவித்தார். முதற்கட்ட பயிற்சி முகாமை தொடர்ந்து 2-வது கட்ட பயிற்சி முகாம் ஜனவரி 13 முதல் 20-ம் தேதி வரை ஜெர்மனியில் நடைபெற உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT