Published : 20 Dec 2019 09:53 AM
Last Updated : 20 Dec 2019 09:53 AM
கிராமங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல், 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய முடியாது என்று மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
இந்தியாவின் பொருளாதாரம் வேளாண்மை மற்றும் விவசாயி களை அடிப்படையாகக் கொண்டது. எனவே கிராமங்களின் வளர்ச்சி யில் கவனம் செலுத்துவது மிக முக் கியம். நகரங்களில் இருக்கும் வசதிகள் அனைத்தும் இந்திய கிராமங்களுக்கும் செய்து தரப்பட வேண்டும் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இருக்கும் பாகு பாட்டை சரி செய்ய வேண்டும்.
இந்தியா 2025-க்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் அடைவதை இலக்காக கொண்டுள்ளது. கிராமப் புறங்களின் வளர்ச்சியின் வழியே அந்த இலக்கை அடைய முடியும் என்று தெரிவித்தார்.
ஊரக மேம்பாட்டு திட்டங்கள் தொடர்பான தேதிய விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற் றது. தனிநபர்கள், நிறுவனங்கள், பஞ்சாயத்து அமைப்புகளுக்கு என 266 விருதுகள் வழங்கப்பட்டன.
அதிக எண்ணிக்கையில் ஊரக மேம்பாட்டு திட்டங்களை மேற் கொண்டதற்காக தமிழகத்துக்கு கோல்டன் விருது வழங்கபட்டது. இந்நிகழ்வில் பேசிய அவர், நாட் டின் வளர்ச்சியில் கிராமப் புறங் களின் பங்களிப்பை, முக்கியத் துவத்தை சுட்டிக்காட்டினார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கென கடந்த 5 ஆண்டுகளில் அதிக நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டார். அந்த திட்டத்தின்கீழ் 2014-ல் ரூ.38,000 கோடி ஒதுக் கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் அதற்கான நிதி ரூ.60,000 கோடியாக உயர்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT