Published : 30 Nov 2019 10:33 AM
Last Updated : 30 Nov 2019 10:33 AM
போர்ஃப்ஸ் இதழ் வெளியிட்ட ‘நிகழ்நேர உலக கோடீஸ்வரர்கள்’ பட்டியலில் முகேஷ் அம்பானி 9-வது இடத்தை பிடித்துள்ளார். நேற்று முன்தினம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடியைத் தொட்டது. அதைத் தொடர்ந்து அவர் அந்தப் பட்டியலில் இடம் பெற்றார்.
2019-ம் ஆண்டுக்கான உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை போர்ஃப்ஸ் நிறுவனம், இவ்வாண் டின் தொடக்கத்தில் வெளியிட்டது. அதில் முகேஷ் அம்பானி 13-வது இடத்தை பிடித்திருந்தார்.
சந்தை மதிப்பு ஏற்ற இறக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ‘நிகழ் நேர கோடீஸ்வரர்கள்’ என்ற தினசரி பட்டியலையும் போர்ஃப்ஸ் வெளியிட்டு வருகிறது. நேற்று முன் தின வர்த்தகத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 0.65 சதவீதம் உயர்ந்து ரூ.1,579.95-க்கு வர்த்தகமானது.
சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடிக்கும் மேலாக உயர்ந்தது. அதைத் தொடர்ந்து அம் பானியின் சொத்து மதிப்பு ரூ.4,20,000 கோடியாக (60 பில்லி யன் டாலர்) உயர்ந்தது. இந்நிலை யில் ‘நிகழ் நேர உலக கோடீஸ் வரர்கள்’ பட்டியலில் அவர் 9-வது இடத்தை பிடித்தார்.
அந்தப் பட்டியலில் 113 பில்லி யன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,91,000 கோடி) சொத்து மதிப்பைக் கொண்டு அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பிஸோஸ் முதல் இடத்திலும், 107.4 பில்லியன் டாலர் (ரூ.7,51,800 கோடி) சொத்து மதிப்பைக் கொண்டு பில் கேட்ஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT