Published : 18 Nov 2019 11:06 AM
Last Updated : 18 Nov 2019 11:06 AM
புதிய தொழில் கொள்கை மூலம் 2025-க்குள் உற்பத்தி துறையின் மதிப்பை 1 டிரில்லியன் டாலர் அள வில் உயர்த்த இலக்கு நிர்ணயித் துள்ளதாக தொழில் நிறுவனம் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம் பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.
மத்திய தொழில் மேம்பாட்டுத் துறை, புதிய தொழில் துறை கொள் கையின் முதல் கட்ட வரைவை உரு வாக்கி உள்ளது. உலக அளவில் தொழில் துறையில் போட்டியிடும் அளவுக்கு இந்தியாவின் தொழில் துறையை மேம்படுத்த அதில் திட்டமிட்டுள்ளது. அதன் மூலம் வேலைவாய்ப்பை அதி கரிக்கவும், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் திட்டமிட்டு உள்ளது.
ஒரு டிரில்லியன் டாலர்
நவீன தொழில் நுட்பங்கள் அடிப்படையிலான நிறுவனங்களை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு உள்ளது. அவை பொருளாதார ரீதியாக பலமிக்கதாக வும், சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத் தாதவாறும் இருக்க வேண்டும். சமூகத்தின் அனைத்து பிரிவினர் களும் அதனால் பயனடைய வேண் டும் என்பதை அடிப்படை நோக்க மாக கொண்டுள்ளது.
தொழில் துறைகளின் வளர்ச் சியை ஊக்குவிக்கும் வகையில் இந்தப் புதிய வரைவு உருவாக்கப் பட்டு இருப்பதாக தெரிவிக்கப் பட்டு உள்ளது. இந்த முதற் கட்ட வரைவு வெவ்வேறு அமைச்ச கங்களுக்கும், துறைகளுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.
புதிய தொழில் துறை கொள்கை கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டு மத்திய அமைச்சகத்துக்கு அனுப் பப்பட்டது. அதன் பிறகு சில புதிய பரிந்துரைகள் முன்வைக்கப் பட்டன. இந்நிலையில் மத்திய தொழில் மேம்பாட்டுத் துறை அந்த பணியை மேற்கொண்டு வருகிறது.
3-வது தொழிற்துறை கொள்கை
இது மூன்றாவது தொழில் துறை கொள்கை ஆகும். முதல் கொள்கை 1956-ம் ஆண்டும், இரண்டாவது கொள்கை 1991-ம் ஆண்டும் கொண்டுவரப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT