Last Updated : 19 Jul, 2015 12:11 PM

 

Published : 19 Jul 2015 12:11 PM
Last Updated : 19 Jul 2015 12:11 PM

கூகுள் பங்கு 16% உயர்வு

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் முடிவில் கூகுள் பங்கு 16 சத வீதம் அளவுக்கு உயர்ந்து முடிந் தன. வியாழன் அன்று கூகுள் நிறுவனத்தின் காலாண்டு முடிவு கள் வெளியானது. சந்தை எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப முடிவு கள் வந்திருப்பதால் உயர்ந்திருக் கிறது. ஒரே நாளில் 16 சதவீதம் உயர்வது இதுதான் முதல் முறை.

மொபைல் மற்றும் யூடியூப் மூலம் கிடைக்கும் விளம்பர வருமானம் அதிகமாக இருப்பதால் நிகர லாபம் உயர்ந்திருக்கிறது.

வெள்ளிக்கிழமை வர்த்தகத் தில் 97 டாலர் உயர்ந்து 699 டாலரில் ஒரு பங்கு வர்த்தகம் முடிந்தது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 703 டாலர் என்ற புதிய உச்சத்தையும் தொட்டது. இந்த உயர்வு காரணமாக ஒரே நாளில் கூகுள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 65.1 பில்லியன் டாலர்கள் உயர்ந்தன. இப்போது கூகுளின் சந்தை மதிப்பு 468 பில்லியன் டாலராக இருக்கிறது. சர்வதேச அளவில் அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்களின் பட்டியலில் கூகுள் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் 745 பில்லியன் டாலர் சந்தை மதிப்பில் முதல் இடத் தில் இருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கு 32% உயர்ந்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x