ரியல் எஸ்டேட் துறையில் கடும் சரிவு; 8 லட்சம் வீடுகள் விற்பனையாகாமல் தேக்கம்

ரியல் எஸ்டேட் துறையில் கடும் சரிவு; 8 லட்சம் வீடுகள் விற்பனையாகாமல் தேக்கம்
Updated on
1 min read

புதுடெல்லி

நாட்டின் முக்கிய ஒன்பது நகரங் களில் 8 லட்சம் வீடுகள் விற்பனை யாகாமல் தேக்கமடைந்துள்ளதாக வீட்டுமனை விற்பனை நிறுவன மான பிராப் டைகர் தெரிவித் துள்ளது.

தற்போது இந்தியா கடும் பொருளாதார மந்த நிலையை சந்தித்து வருகிறது. நாட்டின் உள் நாட்டு வளர்ச்சிக்கு ஆதாரமாக திகழும் பல்வேறு துறைகள் சரிவை சந்தித்து வருகின்றன. தேவை யான அளவில் முதலீடுகள் எதுவும் உருவாகவில்லை. மக்களின் வாங் கும் திறனும் குறைந்துள்ளது. இந் நிலையில் வீட்டுமனை விற்பனை துறையும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது.

முடிந்த ஜூன் காலாண்டு நிலவரப்படி, இந்தியாவில் உள்ள 9 முக்கிய நகரங்களில் 8 லட்சம் வீடுகள் விற்பனையாகாமல் உள் ளன. இதில் 4 லட்சம் வீடுகள் ‘வாங்கக்கூடிய விலையில் உள் ளவை’ அதாவது விலை மதிப்பு அளவில் ரூ.45 லட்சத்துக்கு கீழ் உள்ளவை ஆகும். மக்களுக்கு வீடு வாங்கும் தேவை இருக்கும் போதிலும், தற்போதைய பொரு ளாதார மந்தநிலையில் வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன என்று பிராப் டைகர் நிறுவனம் தெரிவித் துள்ளது. மும்பை, புனே, கல்கத்தா, சென்னை, அகமதாபாத், பெங் களூரு, ஹைதராபாத், நொய்டா, குருக்ராம் ஆகிய 9 நகரங்கள் வீடு விற்பனையில் கடும் சரிவை சந்தித்து உள்ளன.

நடப்பு நிதி ஆண்டுக்கான பட் ஜெட்டில் வீட்டு கடன் வட்டிக்கான வரிவிலக்கு வரம்பை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதன் விளை வாக மக்கள் வீடுகள் வாங்க முன்வருவார்கள் என்று எதிர்பார்ப் பதாக பிராப் டைகர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி துர்வ் அகர்வாலா கூறியுள்ளார். இருந்த போதிலும் வீட்டு விற்பனை அளவு இப்போதைக்கு அதிகரிக்க வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வீடுகள் விற்பனை ஆகாமல் இருக்கும் நகரங்களின் வரிசையில் மும்பை முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in