Published : 15 Jul 2019 06:48 AM
Last Updated : 15 Jul 2019 06:48 AM
பார்வை குறைபாடு உடையவர்கள் ரூபாய் நோட்டுகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் பிரத்யேக மொபைல் செயலி ஒன்றை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
டிஜிட்டல் பரிவர்த் தனை அதிகரித்திருந்தாலும் பணப் பரிவர்த்தனையே இன்னமும் ஆதிக்கம் செலுத்துகிறது. 2018 ஜூன் மாதத்தில் பார்வை யற்றவர்கள் ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண்பதற்கான வழிகள் திட்டமிடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இந்தியாவில் 80 லட்சம் அளவில் பார்வை குறைபாடு உடையவர்கள் உள்ளனர்.
ரூபாய் நோட்டுகளில் இண்டா கிலியோ பிரிண்டிங் மூலம் அதன் மதிப்பை அடையாளம் காணும் வகையிலான குறிகள் அச்சடிக்கப் பட்டன. ஆனாலும், சில ரூபாய் நோட்டுகளில் இந்த வசதி இல்லை. எனவே எல்லா ரூபாய் நோட்டுகளையும் எளிதில் அடை யாளம் காணும் வகையில் மொபைல் செயலி ஒன்றை உரு வாக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள் ளது.
இந்த செயலி, கேமரா மூலம் ரூபாய் நோட்டுகளை புகைப்படம் எடுப்பதன்மூலம் அதன் மதிப்பை தெரியப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்று தெரிவித் துள்ளது. மேலும் ரூபாய் மதிப்பை ஒலி எழுப்பி தெரிவிக்க வேண்டும். ரூபாய் நோட்டு சரியாக கேமராவில் பதிவாகாவிட்டால் அதையும் தெரிவிக்க வேண்டும். இந்த வசதிகள் எல்லாம் இருக்கும் வகை யில் செயலி திட்டமிடப்பட்டு வரு கிறது. இந்த செயலியை உருவாக்க மென்பொருள் நிறுவனங்களுக்கு அழைப்பும் விடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT