Published : 24 May 2014 12:37 PM
Last Updated : 24 May 2014 12:37 PM
$ 2011 பிப்ரவரி முதல் இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவராக இருந்துவருகிறார். கடந்த பிப்ரவரியில் இவரது பதவிக் காலம் முடிந்தாலும் 2016-ம் ஆண்டு மார்ச் வரைக்கும் இவரது பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது.
$ சட்டம் மற்றும் கணிதம் படித்தவர். 1976-ம் வருட ஐ.ஏ.எஸ். அதிகாரி (பிகார் மாநிலம்) இவர்.
$ எஸ்.பி.ஐ. வங்கியில் அதிகாரியாக தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தவர், செபிக்கு வருவதற்கு முன்பு யூ.டி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தலைவராக இருந்தவர்.
$ யூ.டி.ஐ. பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு நிதி அமைச்சகத்தில் இணைச் செயலாளராக இருந்தவர். மேலும் மத்திய அரசில் பல முக்கிய பொறுப்புகளை வகித்திருக்கிறார்.
$ பேங்க் ஆஃப் பரோடா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, ஐ.எஃப்.சி.ஐ., சிட்பி உள்ளிட்டவற்றின் இயக்குநர் குழுவில் இருந்திருக்கிறார். இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் சங்கத் தலைவராகவும் (ஆம்பி) இருந்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT