Published : 22 May 2014 11:00 AM
Last Updated : 22 May 2014 11:00 AM
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியின் ஆண்டு சம்பளம் ரூ. 15 கோடியாகும். தொடர்ந்து 6-வது ஆண்டாக அவர் இந்த சம்பளத்தைப் பெறுகிறார். அவரது நிறுவனத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகளின் சம்பளம் உயர்ந்தபோதிலும் இவர் தனது சம்பளத் தொகையை உயர்த்திக் கொள்ளவில்லை.
2008-09-ம் ஆண்டு இவருக்கு ஆண்டு சம்பளமாக ரூ. 38.86 கோடி அளிக்க பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்தனர். ரூ. 15 கோடியை மட்டும் பெறுவதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 24 கோடியை இவர் இழந்துள்ளார்.
2013-14-ம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் ரூ. 4.16 கோடி. இதர சலுகைகள் ரூ. 60 லட்சம். ஓய்வுக்கால நிதிக்கு ரூ. 82 லட்சம் ஒதுக்கப்பட்டது. லாபத்தில் பங்காக ரூ. 9.42 கோ அளிக்கப்பட்டது.
ரிலையன்ஸ் நிறுவனத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயுப் பிரிவின் தலைவர் பி.எம். பிரசாத் சம்பளம் ரூ. 5.47 கோடியிலிருந்து ரூ. 6.03 கோடியாக உயர்ந்
துள்ளது. சுத்திகரிப்பு பிரிவின் தலைவர் பவன் குமார் கபில் சம்பளம் ரூ. 2.49 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் சம்பளம் 1.05 கோடி உயர்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT