Published : 10 Jun 2015 10:15 AM
Last Updated : 10 Jun 2015 10:15 AM
பொருளாதார மந்த நிலை காரண மாக 50,000 பணியாளர்களை நீக்க முடிவு செய்திருக்கிறது ஹெச்எஸ்பிசி. மேலும் இன்வெஸ்ட் மென்ட் வங்கிப் பிரிவை மூடவும் ஹெச்எஸ்பிசி திட்டமிட்டிருப்பதாக நேற்று தெரிவித்தது.
ஹெச்எஸ்பிசியின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்டுவர்ட் கலிவர், ஹாங்காங் பங்குச்சந்தைக்கு இந்த தகவலை தெரிவித்தார். 2011-ம் ஆண்டு தலைவராக பொறுப்பேற்ற பிறகு நிறுவனத்தில் செய்யப்படும் இரண்டாவது பெரிய அதிரடி மாற்றம் இதுவாகும்.
2010-ம் ஆண்டு இந்த வங்கியில் 2,95,000 முழு நேர பணியாளர்கள் இருந்தார்கள். 2014-ம் ஆண்டு இந்த எண்ணிக்கையை 2,58,000 ஆக நிறுவனம் குறைத்தது. இனி பணியாளர்களின் எண்ணிக்கை 2,08,000 ஆக குறையும். ஐந்தில் ஒருவருக்கு வேலை இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருக் கிறது.
பிரேசில் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள கிளைகளை மூடுவதற்கு திட்டமிட்டிருக்கிறது. இங்கு பணியாற்றும் 25,000 நபர்களையும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த துறைகளை சேர்ந்த 22,000 முதல் 25,000 நபர்களை நீக்க வங்கி திட்டமிட்டிருக்கிறது.
துருக்கி மற்றும் பிரேசில் பிரிவினை மூடப்போவதாக அதிகார பூர்வமாக அறிவித்திருந் தாலும் கார்ப்பரேட் வாடிக்கை யாளர்களுக்கு தொடர்ந்து சேவை புரிய இருப்பதாகவும் தெரிவித் திருக்கிறது.
இந்த வேலை குறைப்பு 2017-ம் ஆண்டு நிறைவு பெறும். 50,000 நபர்களை வரை நீக்க திட்டமிட்டிருந்தாலும் வளர்ந்து வரும் வியாபார பிரிவில் ஆட்களை எடுக்கவும் வங்கி திட்டமிட்டிருக்கிறது. ஆனால் எவ்வளவு நபர்கள் வேலைக்கு எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள் என்ற விவரத்தை வங்கி தெரிவிக்கவில்லை.
சர்வதேச வங்கி மற்றும் சந்தை பிரிவு வருமானம், வங்கியின் மொத்த வருமானத்தில் மூன்றில் ஒரு பங்காக குறையும் என்று கணித்திருக்கிறது. தற்போது இந்த பிரிவின் வருமானம் மொத்த வருமானத்தில் 40 சதவீதமாக இருக்கிறது.
இந்த அறிவிப்பு காரணமாக இந்த வங்கியின் பங்குகள் 1.5 சதவீதம் வரை உயர்ந்து முடிந்தன. இத்தனைக்கும் ஹேங்செங் குறியீடு நேற்று 1 சதவீதம் சரிந்தது. நிறுவனத்தின் இந்த முடிவினை முதலீட்டாளர்கள் வரவேற்றிருக்கிறார்கள் என்று ஹாங்காங்கை சேர்ந்த வல்லுநர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பில் வேலை இழப்புகள் பற்றி மட்டுமல்லாமல் ஆசிய பிராந்தியத்தில் காப்பீடு பிரிவு வருமானத்தை எப்படி உயர்த்துவது என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை லண்டனில் இருந்து ஆசியாவுக்கு, குறிப்பாக ஹாங்காங் நகரத்துக்கு மாற்றுவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. வளர்ச்சி, வரி, அரசாங்க ஆதரவு உள்ளிட்ட 11 விஷயங்களை ஆய்வு செய்த பிறகு இந்த முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று ஹெச்எஸ்பிசி வங்கி தெரிவித்திருக்கிறது. உலக பொருளாதாரம் கிழக்கு நோக்கி திரும்புவதாக ஹெச்எஸ்பிசி வங்கியின் தலைவர் ஸ்டுவர்ட் கலிவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT