Published : 19 May 2015 10:10 AM
Last Updated : 19 May 2015 10:10 AM
இந்திய மொபைல் விற்பனை சந்தை சரிவை சந்தித்துள்ளது. கடந்த 20 வருடங்களில் மொபைல் விற்பனை முதல் முறையாக சரிவைச் சந்தித்துள்ளது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தை வேகமாக வளரும் என கணிக்கப்பட்ட நிலையில் சரிவை சந்தித்துள்ளது.
2015 ம் ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் மொபைல் விற்பனை 14.5 சதவீதம் குறைந்துள்ளது. 2014 டிசம்பருடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் 6.2 கோடி செல்போன்கள் விற்பனையானது. இது 2015 முதல் காலாண்டில் 5.3 கோடியாகக் குறைந்துள்ளது. இந்த புள்ளிவிவரங்களை சைபர்மீடியா ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
காலாண்டு இடைவெளியில் ஸ்மார்ட்போன்களின் விற்பனை 7.14 சதவீதம் குறைந்துள்ளது. குறைந்த விலையிலான ஃபெதர் போன்கள் விற்பனையும் மோச மாக விற்பனை குறைந்துள் ளது. இந்த வகை போன்கள் விற்பனை 18.3 சதவீத அளவுக்குக் குறைந்துள்ளது.
2014 ம் ஆண்டில் ஆசிய பசிபிக் நாடுகளில் ஸ்மார்ட்போன்கள் அதிக அளவில் விற்பனையாகும் நாடாக இந்தியா இருந்தது. ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இருக்கும் அமெரிக்காவை இந்தியா முந்தக்கூடும் எனவும், 2016 ல் 20.40 கோடி மக்கள் ஸ்மார்ட்போன்கள் பயன் படுத்துவார்கள் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
மொபைல் போன்கள் விற்பனை குறித்த இந்த ஆய்வை பெரிய பிரச்சினையாக பார்க்கவேண்டும். இந்திய மொபைல் விற்பனை சரிகிறதா அல்லது சுழற்சி முறை யிலான சரிவா என்பதை சந்தை வல்லுனர்கள் நோக்க வேண்டும்.
2014 டிசம்பர் மாதம் அதி கரித்த விற்பனை காரணமாக புது பிராண்டுகள் மற்றும் புது செல்போன்கள் அறிமுக மானது. 2015 ன் முதல் காலாண் டில் விற்பனையை அதி கரிக்க இது உதவிகரமாக இருக் கும் என சந்தையில் எதிர்பார்க்கப் பட்டது என தொலைதொடர்பு ஆலோசகர்கள் சைபர் மீடியா வுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் உற்பத்தியாளர்கள் விற்பனையை அதிகரிக்க முயற்சி எடுக்கின்றனர். 6 சதவீத மாக இருந்த வரியை 12.5 சதவீதமாக அதிகரித்துள்ள கார ணத்தால் செல்போன்களின் விலை சராசரியாக 4 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த சந்தை சரிவுக்கு இரண்டு முக்கிய காரணங்கள் சொல்லப் படுகிறது. ஒன்று விற்பனை யாளர்கள் நிலையாக இல்லாதது. ஒரு காலாண்டில் ஒருவர் அதிக விற்பனை செய்கிறார் என்றால் அடுத்த காலாண்டில் வேறொருவர் முன்னிலை வகிக் கிறார். இன்னொரு காரணம் ஆன்லைனில் உடனடி விற்பனை காரணமாகவும் குறைந்துள்ளது.
இந்தியாவில் இணைய தளத்தின் மூலம் விற்பனை செய்வது அதிகரித்து வருவதால் பிராண்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதை கவனம் செலுத்துகின்றன. அந்த வகையில் ஜியோமி இண்டெர்நெட் சந்தையை சரியாக பயன்படுத்திக் கொண்டது.
ஏற்கெனவே முன்னணி யில் உள்ள பிராண்டட் நிறுவனங்க ளான மைக்ரோமேக்ஸ், சாம்சங் போன்றவை வழக்க மான சந்தையில் கவனம் செலுத்து கின்றன. தங்களுக்கு ஏற்கனவே உள்ள விநியோக சந்தையை உறுதியாக வைத்துள்ளன. இந்தியா முழுவதும் விற்பனையை அதிகரிக்க இந்த நிறுவனங்கள் தங்களது நெட்வொர்க்கை வலுவாக வைத்துள்ளன.
2014ம் ஆண்டில் சீன நிறுவனங்கள் தவிர பல புதிய நிறுவனங்களும் மொபைல் சந்தைக்கு வந்துள்ளன. 18.5 சதவீத சந்தையை சாம்சங் நிறுவனம் தொடர்ச்சியாக தக்க வைத்தது. அதற்கு அடுத்து மைக்ரோமேக்ஸ் 12.1 சதவீதமும் மைக்ரோசாப்ட் நிறுவனம் 9.6 சதவீத சந்தையையும் பிரித்திருந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT