Last Updated : 07 Apr, 2015 10:28 AM

 

Published : 07 Apr 2015 10:28 AM
Last Updated : 07 Apr 2015 10:28 AM

கருப்புப் பணம்: அபராதம் செலுத்த வாய்ப்பு- சிஐஐ கூட்டத்தில் அருண் ஜேட்லி பேச்சு

வெளிநாடுகளில் பதுக்கி வைத் துள்ள கருப்புப் பணத்தை இந்தியா வுக்குக் கொண்டு வந்து வரி மற்றும் அபராதம் செலுத்துவதன் மூலம் அதை கணக்கில் காட்டிய பணமாக மாற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

வரி ஏய்ப்பு செய்வற்கு ஏற்ற நாடு இந்தியா என்ற சூழலை மத்திய அரசு ஒருபோதும் அனு மதிக்காது என்று குறிப்பிட்ட அவர், வெளிநாடுகளில் பணத்தை பதுக்கி வைத்திருப்போர், அதை தாங்களாகவே முன்வந்து ஒப்படைப்பதன் மூலம் ஓரளவு தொகையை எடுத்துச் செல்ல முடியும் என்றார்.

இந்திய தொழிலகக் கூட்டமைப் பின் (சிஐஐ) ஆண்டுக் கூட்டத்தில் பேசிய அவர், பணத்தை பதுக்கிய வர்கள் ஓரளவு தொகையை எடுத் துச் செல்வதற்கு வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளதாக அவர் கூறினார்.

விதிக்கப்பட்ட வரித் தொகையை கட்டாயம் செலுத்த வேண்டும். அதிலிருந்து தப்பிக் கவே முடியாது என்றார்.

சுமார் 100 அந்நிய முதலீட்டு நிறுவனங்களுக்கு வரி செலுத்து வது தொடர்பான நோட்டீஸ் அளிக் கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரித் தொகை சுமார் 500 கோடி டாலர் முதல் 600 கோடி டாலர் வரையாகும்.

கடந்த சில ஆண்டுகளில் வெளி நாட்டு நிறுவனங்கள் உரிய வரி யைச் செலுத்தாமல் தப்பித்துள் ளன. இத்தகைய அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் இந்திய பங்குச் சந் தையில் முதலீடு செய்து ஆதாய மடைந்துள்ளன. ஆனால் வரி யைச் செலுத்தவில்லை. இத் தகைய நிறுவனங்கள் மீது மாற்றத் தகுந்த வரி விதிப்பு (எம்ஏடி) 20 சதவீதத்தை வருமான வரித்துறை விதித்துள்ளது.

வரி செலுத்தாத நிறுவனங்கள் ஒரு போதும் செலுத்துவதில்லை. வரி செலுத்துவது தொடர்பாக நீதிமன்றத்துக்குச் செல்லத் தயா ராக உள்ளன. ஆனால் செலுத்த வேண்டிய வரியை கட்டாயம் செலுத்தித்தான் ஆக வேண்டும். கொஞ்சம் சுதந்திரமாக இருப்பதை இந்நிறுவனங்கள் தவறாக அர்த்தம் கொண்டுள்ளன.

வரி செலுத்த நோட்டீஸ் அனுப்பினாலே அதை `வரி தீவிரவாதம்’ என்று கூறுவது சரியல்ல. செலுத்த வேண்டிய வரியை கட்டாயம் செலுத்தித்தான் ஆக வேண்டுமே தவிர இந்தியா ஒருபோதும் வரி ஏய்ப்பு செய்வதை ஊக்குவிக்கும் நாடாக இருக்காது என்றார்.

கடந்த மாதம் நாடாளுமன்றத் தில் அருண் ஜேட்லி தாக்கல் செய்த வெளிநாட்டில் பதுக்கிய சொத்துகளுக்கு வரி விதிக்கும் மசோதாவில், வெளிநாட்டில் பதுக் கியுள்ள தொகைக்கு 300 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் அத் துடன் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டு கள் வரை சிறைத் தண்டனை விதிக் கப்படும் என்றும் தெரிவித்தார்.

நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்பு முறைகளை மேலும் எளி மைப்படுத்துவதற்கான நடவடிக் கைகளை அரசு எடுத்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிர மாக மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார். இதை அமல்படுத்து வதில் அனைத்து மாநிலங்களின் ஒருமித்த ஒத்துழைப்பைப் பெறு வதில் அரசு தீவிரம் காட்டி வரு கிறது. அடுத்து வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப் படும் என்றார்.

மக்களவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறினால் அதன் பிறகு மாநிலங்களின் ஒத்துழைப்பு பெறப்படும். சமீப காலங்களில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய வரிச் சீர்திருத்தம் இதுவாகத் தானிருக்கும் என்று குறிப்பிட்டார்.

நிறுவன சட்டத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்று கூறிய ஜேட்லி, குழுவின் பரிந்துரை அடிப்படையில் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றார்.

இருப்பினும் இந்த மசோதாவில் சில விலக்குகளும் அளிக்கப்பட் டுள்ளன. வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்காக இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் இவ் விதம் வெளிநாடுகளில் பணத்தை பதுக்கியுள்ளவர்கள் தாங்களா கவே முன்வந்து தகவல் தெரிவிக்க வேண்டும்.

அவ்விதம் தெரிவிப்பவர்கள் கணக்கில் காட்டும் சொத்துக்கு 30 சதவீத வரி செலுத்த வேண்டும். அத்துடன் 100 சதவீத அபராதம் செலுத்த வேண்டும். இவை இரண் டையும் சேர்த்துக் கணக்கிட்டால் 60 சதவீத தொகையை அவர்கள் செலுத்த வேண்டியிருக்கும். மீதி 40 சதவீத தொகையை அவர்கள் எடுத்துச் செல்ல வாய்ப்பு உள்ளது. இவ்விதம் தெரிவிப்பதன் மூலம் 40 சதவீத தொகை கணக்கில் உள்ள பணமாகிவிடும்.

வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணம் குறித்த விவரம் இந்தியா வில் உறுதிபட இல்லை. இருப் பினும் 46,600 கோடி டாலர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைக் கப்பட்டுள்ளதாக அதிகார பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x