Published : 27 Feb 2015 10:10 AM
Last Updated : 27 Feb 2015 10:10 AM
இத்தாலியில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஃபார்முலா எஸ்.ஏ.இ. கார் பந்தயத்தில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக ஆட்டொமொபைல் மாணவர்கள் உருவாக்கியுள்ள கார் பங்கேற்கவுள்ளது. முழுக்க முழுக்க மின்சாரத்தால் இயங்கக்கூடியது தான் அந்த காரின் தனிச்சிறப்பு.
உலகளவிலான ரேஸ் பந்தயங்களில் இந்தியர்களின் பங்களிப்பு பெரியளவில் கிடையாது. இந்நிலையில் இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட கார்களை பந்தய மைதானத்தில் காண்பதும் அரிது.
இப்படியான சூழலில் இத்தாலி நாட்டில் வரும் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள ஃபார்முலா எஸ்.ஏ.இ ரேஸில் பங்கேற்க தயாராகி வருகிறது இந்தக் கார். இந்த கார் 25 பொறியியல் மாணவர்களால் உருவாக்கப்பட்டது. பேட்டரியில் இயங்கும் இந்தக் கார் மற்ற ரேஸ் கார்களைப் போல சீறிப் பாயும்.
இதற்கான காப்புரிமை பெற மாணவர்கள் விண்ணப் பித்துள்ளனர். தங்கள் குழுவுக்கு 4ze racing team என்று பெயர் வைத்துள்ளார்கள். இதற்கு முன்பாக ரியோ என்னும் எலெக்ட்ரிக் காரை தயாரித்துள்ள அவர்கள், கடந்த மூன்றாண்டு கால உழைப்பில் ஒரு முழுமையான ரேஸ் காரை தயாரித்துள்ளார்கள்.
சில முக்கிய பாகங்கள் தவிர பெரும்பாலான பாகங்களை மாணவர்களே தயாரித்துள்ளதுதான் இந்தக் காரின் முக்கிய அம்சம். இந்தக்காரை ஆட்டொமொபைல், மெக்கானிக்கல், மின்னணு ஆகிய துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கியுள்ளனர்.
இந்த 25 பேர் கொண்ட மாணவர் குழுவை வழி நடத்திய சாய் கிருஷ்ணாவை தொடர்பு கொண்டபோது அவர் கூறியது:
அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கார் பந்தயத்தில் ஆர்வம் உள்ள ரேஸர்கள் வெகு அபூர்வம். இதனாலேயே நமது நிறுவனங்கள் கார் பந்தய மைதானத்தினுள் நுழைவதே கிடையாது. எனவே தான் முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பில் ஒரு ரேஸ் காரை உருவாக்குவது என்று கடந்த 2012 ம் ஆண்டு திட்டமிட்டோம். இந்த திட்டம் இப்போது நிறைவேறியுள்ளது.
ரேஸ் கார் என்றாலே புகை வரும். இதை மாற்ற எங்கள் காரை முழுக்க முழுக்க மின்சாரத்தால் இயங்குவது போல் தயாரித்துள்ளோம். ஏற்கெனவே நாங்கள் தயாரித்த ரியோ-வுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகமே எங்களுக்கு இந்தக்காரை உருவாக்குவதற்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்டது.
இந்தக் காரின் எடை 290 கிலோ ஆகும். தற்போதைய நிலைக்கு இந்தக்காரை 2 மணி நேரம் சார்ஜ் செய்தால் 23 கிலோ மீட்டர் பயணம் செய்ய முடியும் அதுவும் சராசரியாக மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம். அதிகபட்சமாக இந்தக் காரால் 110 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய முடியும்.
இத்தாலியின் எஸ்.ஏ.இ ரேஸிங் ட்ராக்கின் நீளம் 22 கி.மீ என்பதால் இந்தக்காரை ஒரு முறை சார்ஜ் செய்து எளிதில் ஒரு சுற்றை செய்யலாம்.
டிசி மோட்டாரால் இயங் கக்கூடிய இந்தக்காருக்கு லித்தியம் பாலிமர் பேட்டரியை பொறுத்தியுள்ளோம். இதன் வோல்டேஜ் 142v/31A-h ஆகும். ஃபார்முலா எஸ்.ஏ.இ என்னும் ரேஸ் பந்தயம் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மன் போன்ற உலகின் பல முன்னணி நாடுகளில் நடந்துள்ளது. இந்த பந்தயம் இந்தாண்டு இத்தாலியில் நடக்கிறது. இதற்காகவே இதனை தயார்ப்படுத்தியுள்ளோம். எஸ்.ஏ.இ பந்தயத்தில் கலந்து கொள்வதற்கான தகுதிகளை பூர்த்தி செய்துள்ளது.
இதனை எங்கள் கல்லூரியின் சக மாணவர்கள்தான் ஓட்ட உள்ளனர். இதற்கு முன்னதாக கல்லூரி வளாகத்திலேயே காரை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தவுள்ளோம். ஃபார்முலா போட்டியில் பங்கேற்க முதலாவது தகுதிச்சுற்று ஒன்று உள்ளது. அந்த தகுதிச்சுற்றில் பிரேக், கியர், என்ஜின் என காரின் நிலையை தனித்தனியாக சோதனை செய்வார்கள்.
காரை இந்த சோதனைக்கு தயார்படுத்திக் கொண்டு வருகிறோம். இதையடுத்து டயனமிக் என்னும் சுற்றில் ஜாம்பவான் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் கார்களுடன் எங்களது காரும் நேரடியாக மோதவுள்ளது.
இந்தக்காரை மேலும் மெரு கேற்றிய பிறகு சந்தைகளில் அறிமுகப்படுத்தவும் திட்டமிட் டுள்ளோம்.
இது சந்தைக்கு வந்தால் கிட்டத்தட்ட ரூ 12 லட்சத் துக்கு விற்பனையாகும். இது மின்சாரத்தால் இயங்கக்கூடியது என்பதால் வருங்காலத்தில் ஃபார் முலா பந்தயங்களை முழுக்க முழுக்க பேட்டரி கார்களை கொண்டு நடத்துவதற்கான சாத்தி யங்கள் உருவாகும்.
வார இறுதி நாட்களில் ரேஸிங் செய்ய விரும்புபவர்களுக்கு இது பெரியளவில் கைகொ டுக்கும். அடுத்தகட்டமாக மின்சாரத்தால் இயங்கக் கூடிய காரை வடிவமைக் கவுள்ளோம் என்றார்.
manikandan.m@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT