Published : 06 Feb 2015 11:45 AM
Last Updated : 06 Feb 2015 11:45 AM
கார்கள் என்றாலே பல லட்ச ரூபாய் ஆகும் என்பதுதான் நமது எண்ணம். ஆனால் இந்தியச் சந்தைகளில் புகாட்டி, ஆடி, லம்போகினி என சத்தமேயில்லாமல் கோடி ரூபாய் விலையிலும் ஆடம்பர கார்கள் விற்பனையாகிக் கொண்டுதான் உள்ளன.
இன்றைய நவீன வாழ்க்கை முறையில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு காரின் மீது தனிப்பட்ட ஈர்ப்பு உள்ளது. அந்த காரை தங்களின் லட்சியக் காராக கருதுகிறார்கள். அந்த காரை யாரோ ஒருவர் ஓட்டி வந்தால், ஏக்கத்துடன் ஒரு நொடி நின்று பார்ப்பவர்கள் ஏராளம்.
இதன் விளைவு மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக இந்தியா விலும் ஆட்டொமொபைல் சந்தை விரிவடைந்துள்ளது. இதனால் பூந்தமல்லி நெடுஞ்சாலை யிலும், அண்ணா சாலையிலும் ரோல்ஸ் ராய்ஸ், ஆடி கார்கள் சர்வ சாதாரணமாக மிதந்து செல்கின்றன.
இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள் என நட்சத்திர அந்தஸ்து உள்ளவர்கள் மட்டுமன்றி, அந்த அடையாளத்துக்கு அப்பாற் பட்ட பலரும் கோடி ரூபாய் கார்களில் வலம் வருகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை இன்றைக்கு அதிகளவிலான விலையில் விற்பனை செய்யப் படுவது புகாட்டி வெய்ரான் கிராண்ட் ஸ்போர்ட்ஸ் மாடல்தான். இதன் விலை ரூ 38 கோடி. இந்தக் காரை ஸ்டார்ட் செய்து கியர் தட்டி ஆக்சிலேட்டரை அழுத்திய 2 விநாடியில் 100 கிமீ வேகத்தை தொட முடியும்.
அது மட்டுமன்றி மணிக்கு 407 கி.மீ வேகத்தில் செல்ல முடியும். இதற்குத்தான் இந்த விலை. ஸ்போர்ட்ஸ் மாடல் கார் ஆன புகாட்டியை வாங்க 6 மாதத்துக்கு முன்பாகவே முன்பதிவு செய்ய வேண்டுமாம்.
இதற்கடுத்து ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் வகையறாக்கள். இந்த கார்கள் இரு வேறு சக்கர அமைப்புகளுடன் சந்தைக்கு வருகின்றன. இவை ரூ 8 கோடியில் ஆரம்பித்து ரூ 10 கோடி வரையில் விற்பனை செய்யப்படுகின்றன. ரோல்ஸ் ராய்ஸ் காரின் டீலர்கள் இந்தியாவில் சண்டீகர், டெல்லி, ஹைதராபாத், மும்பை என நான்கு இடங்களில்தான் உள்ளன.
இந்த காரை ஸ்டார்ட் செய்த 5-வது நொடியில் 100 கி.மீ வேகத்துக்கு எடுத்துச்செல்ல முடியும். மேலும் இது மணிக்கு 240 கி.மீ வேகம் வரை பறக்கும். சொகுசு காரை போன்ற தோற்றத்துடன் ரேஸ் கார் வேகத்தில் பாய்வதாலேயே பல பிரபலங்கள் போட்டி போட்டுக்கொண்டு இதனை வாங்கியுள்ளனர்.
பெண்ட்லி முல்சேன் கார் 7.5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தக் காருக்குள் வை-ஃபை, புளுடூத், 20 ஜிபி ஹார்ட் டிஸ்க், எல்.சி.டி திரை டிவிடி பிளேயர், சீரான ஒலியை தரும் 20 ஸ்பீக்கர்கள் என ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன.
இந்தக்காரை ஸ்டார்ட் செய்த அடுத்த 6-வது விநாடியில் 100 கி.மீ வேகத்தை தொட முடியும். இந்தக்காரை இந்தியாவில் டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் மட்டும்தான் வாங்க முடியும். இதனை வாங்குவதற்கு குறைந்தது ஆறு மாதம் முன்பே முன்பதிவு செய்வது அவசியம்.
ஸ்போர்ட்ஸ் காரான லம்போகினி அவெஞ்சர் ரூ. 5.3 கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஸ்போர்ட்ஸ் மாடல் என்பதால், எல்லோரும் இதனை விரும்பு வதில்லை. எனினும், ரேஸிங்கில் ஆர்வமுள்ளவர்கள் இந்தக் கார்களை ஆர்வத்துடன் வாங்கு கிறார்கள். ரேஸ் ட்ராக்கில் ஓட்டுகிற காரைப்போலவே மஞ்சள், வெள்ளை, சிகப்பு என பல நிறங்களில் கிடைக்கிறது இந்தக்கார். இந்தியாவில் இந்த காருக்கான விற்பனை மையம் டெல்லியில் மட்டும்தான் உள்ளது.
இதேபோல் ஆஸ்டன் மார்டின் காரும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தக்காரின் விலை ரூ 3.8 கோடியாகும். ஸ்லிம்மான தோற்ற அமைப்பை கொண்ட இந்தக்கார், ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களின் மூலம் பிரபலமானது.
இந்தக்காரை ஸ்டார்ட் செய்த 4.5 நொடிக்குள் 100 கிமீ வேகம் வரை எடுத்து செல்லலாம். இது மணிக்கு 295 கிமீ வேகத்தில் செல்வது குறிப்பிடத்தக்கது.
மேலும், இரட்டை கிளட்ச் கியர் பாக்ஸுடன் வந்துள்ள பெராரி கலிபோர்னியாவும் இந்திய சந்தைகளில் வரவேற்பை பெற் றுள்ளன. இவை ரகத்துக்கு ஏற்ப ரூ 3 கோடி மற்றும் ரூ 5 கோடி என இரண்டு விலைகளில் கிடைக்கின்றன. ஸ்போர்ட்ஸ் மாடல் காரான பெராரி கலிபோர்னியாவுக்கு டெல்லி, மும்பையில் மட்டுமே விற்பனை மையங்கள் உள்ளன.
ஆடி காரைப்பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதன் எல்.இ.டி விளக்கின் வெளிச்சம் ஒன்றே அரை மணி நேரத்துக்கு நம்மை வேடிக்கை பார்க்க வைக்கும். இந்த ஆடி வகையறாக்களில் இந்தியாவின் விலையுயர்ந்த காராக உள்ளது ஆடி ஆர்8 எல்எம்எக்ஸ். இதன் விலை 2.97 கோடி ரூபாயாகும். மணிக்கு 320 கிமீ வேகம் செல்லும் இந்தக்கார் பல பணக்காரர்களின் கைகளில் உள்ளது.
இந்த கார்களை தவிர போர்ஷ் 911 டர்போ எஸ், ரோல்ஸ் ராய்ஸ் ராத், ரோல்ஸ் ராய்ஸ் ட்ராப்ஹெட், கோய்னிஸெக் அஜெரா, மேபேச் 62 எஸ், பெண்ட்லி ப்ரூக்லேண்ட் என பல கார்கள் கோடி ரூபாய் தாண்டி விற்பனையாகிக்கொண்டுள்ளன.
இந்த ஆடம்பர கார்கள் பெரும் பாலானவைக்கு டீலர்களும் ஷோ ரூம்களும் பெரியளவில் கிடை யாது. டெல்லி, மும்பை என சில நகரங்களில் மட்டும்தான் இதற் கான விற்பனை மையங்கள் உள்ளன. எனவே, அவற்றை பொது மக்களுடன் இணைக்கும் நோக்கில் பல்வேறு ஆன்லைன் கார் விற்பனை இணையதளங்கள் முளைத் துள்ளன.
இவற்றை தொடர்பு கொண்டால், புதியது, செகண்ட் ஹேண்ட் என சோதனை ஓட்டத் தை மேற்கொள்ள வீட்டுக்கே கார்களைக் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார்கள். அந்தஸ்தின் அடையாளமாகத் திகழும் இத்தகைய கார் களுக்கு இந்தியச் சந்தை யில் பெரும் வர வேற்பு கிடைத்ததில் வியப் பில்லைதானே.
manikandan.m@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT