Last Updated : 10 Dec, 2014 11:03 AM

 

Published : 10 Dec 2014 11:03 AM
Last Updated : 10 Dec 2014 11:03 AM

தேசிய தங்க நகைக் கொள்கை: பிக்கி வலியுறுத்தல்

புதிய தேசிய தங்க நகைக் கொள்கையை அரசு வகுக்க வேண்டும் என்று இந்திய வர்த்தக கூட்டமைப்பான பிக்கி வலியுறுத்தியுள்ளது. தங்கம் சார்ந்த முதலீட்டுத் திட்டங்களுக்கு என்று தனியாக வாரியம் (பங்குச் சந்தை போன்று) தொடங்க வேண்டும் என்றும், இதன் மூலம் கையிருப்பில் பயன்படுத்தப்படாமல் உள்ள 22 ஆயிரம் டன் தங்கத்தை முறையாக பயன்படுத்த முடியும் என்றும் அது தெரிவித்துள்ளது.

இந்திய வர்த்தகக் கூட்டமைப்பு மற்றும் வேர்ல்டு கோல்டு கவுன்சில் நேற்று கூட்டாக அறிக்கை வெளியிட்டது. இதில் மத்திய அரசு தங்கத்திற்கு என்று தனியாக ஒரு வாரியத்தை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளது. தங்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விவகாரங்களை இந்த வாரியம் கண்காணிக்க வேண்டும் என்றும், தங்க இருப்பை கண்காணிப்பதும், தங்கத்தின் மீதான தரச்சான்று கொடுப்பதும் இந்த வாரியம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

கடந்த ஐந்தாண்டுகளில் தங்கத்தின் மீதான நுகர்வு ஆண்டொன்றுக்கு சராசரியாக 895 டன்களே நுகர்வு செய்யப்பட்டுள்ளது. இது தற்போதைய கையிருப்பில் 4 சதவீதமாக உள்ளது. இதிலும் ஆபரண பயன்பாட்டுக்கான விகிதம் குறைவாகவே உள்ளது என்று கூறியுள்ளது. இது இந்திய தங்க இறக்குமதியில் எதிரொலிகிறது என்றும் பிக்கி கூறியுள்ளது.

இது தொடர்பாக பேசிய வேர்ல்டு கோல்டு கவுன்சில் நிர்வாக இயக்குநர் பிஆர்.சோமசுந்தரம் ‘இந்திய குடும்பங்களிலிருந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான வழிகளைக் கண்டறிய வேண்டும். கையிருப்பு வைத்திருப்பவர்களிடமிருந்து வளர்ச்சியை நோக்கிய நீண்ட கால தங்கக் கொள்கையாக இருக்க வேண்டும்’ என்றார்.

தங்க நகை சேமிப்புத் திட்டங்களை மேற்கொள்ள வங்கி களை ஊக்கப்படுத்த வேண்டும். தங்க முதலீடு திட்டங்கள் பங்குச்சந்தை முதலீடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால் நுகர் வோரால் புரிந்து கொள்ள முடிய வில்லை.

இதை வங்கிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு தங்க முதலீடு மற்றும் சந்தைகள் குறித்து விளக்க வேண்டும் என்றார்.

தற்போதைய தங்க கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்றால் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களின் குறைந்தபட்ச டெபாசிட் தொகையை குறைக்க வேண்டும். வாடிக்கையாளர் திரும்பி செலுத்தும் தொகைகளை பணமாக செலுத்துவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

தங்கம் சார்ந்த பரஸ்பர நிதிய முதலீடுகள் தற்போது வரிச்சலுகை கொண்ட திட்டங்களாக உள்ளது. ஆனால் இது பங்குச்சந்தை சார்ந்த சேமிப்பு திட்டங்களாக மாற்ற வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

கோல்டு எக்ஸ்சேஞ்ச் உருவாக் குவதன் மூலம் தங்கத்துக்கான தேசிய அளவிலான விலையை நிர்ணயம் செய்ய முடியும். லண்டனில் தங்க சந்தையில் இந்த முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போதைய நிலையில் தங்கம் வாங்குவதும் விற்பதும் பல வழிகளில் நடக்கிறது. சட்ட ரீதியாகவும், சட்டத்துக்கு புறம்பாகவும் நடக்கிறது. இதற்கான ஒரு வாரியம் கொண்டுவந்தால் தேவைக்கும் அளிப்புக்குமான இடைவெளியை நிர்வாகம் செய்ய முடியும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

பெரும்பாலான தங்க நகை விற்பனையாளர்கள் ஆபரண நகைகளுக்கு எந்த சான்றிதழையும் அளிப்பதில்லை. சில பெரிய விற்பனையாளர்கள் மட்டும் இந்த தரச் சான்றுகளை அளிக்கின்றனர். இந்த கவுன்சில் அமைக்கப்பட்டால் இது முறைப்படுத்தப்படும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

பிராண்டட் ஆன தங்க காசுகளை உற்பத்தி செய்து, இதற்கு அங்கீகரிக்கபட்ட விற்பனையாளர்களை உருவாக்க வேண்டும். இவர்களிடமிருந்து தங்க நகை செய்பவர்கள் தங்கத்தை வாங்குவதுபோல முறைப்படுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x