Published : 27 Dec 2014 10:29 AM
Last Updated : 27 Dec 2014 10:29 AM
வரி வசூலில் நேர்மையும் உறுதியும் அவசியம் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். டெல்லியில் இந்திய வரு வாய்த்துறை சேவை (ஐஆர்எஸ்) பணிக்கு தேர்வு பெற்றவர்களுக்கு தொழில் முறை பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்துப் பேசுகையில் அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.
வரி வசூல் செய்பவரின் பணி இரண்டு விஷயங்கள் ஒன்று சேர்ந்ததாக இருக்க வேண்டும். வரி வசூலில் அவர் உறுதியாக இருக்க வேண்டும். அதேசமயம் நேர்மையாக இருத்தல் அவசியம். யாருக்கும் எத்தகைய சலுகையோ, வரிக் குறைப்போ செய்யக் கூடாது.
வரி விதிப்புக்கான விதிமுறை களை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும். எதற்கெல்லாம் வரி விதிக்க வேண்டுமோ அதற்கு கட்டாயம் வரி விதிக்க வேண் டும். அதேபோல வரி விதிப்பு தேவை யில்லை என்றால் அதற்கு விதிக்கக் கூடாது. இந்த விஷயத்தில் சம விகிதத்தில் அதிகாரிகள் செயல்பட வேண்டும். புதிதாக சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) முறை அமலுக்கு வர உள்ளது. பொறுப்பேற்க உள்ள அதிகாரிகள் புதிய வரி விதிப்பு முறைகளை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த பயிற்சி முடிந்து வெளியேறும்போது வரி வசூல் முறையில் பெரும் மாற்றங்கள் இருக்கும். எனவே வரி விதிப்பு மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.சுங்க வரி, சேவை வரி, உற்பத்தி வரி இப்படி எத்தகைய வரி விதிப்பாக இருந் தாலும் அவையனைத்தும் தகவல் தொழில்நுட்ப பின்புலத் தில் ஒருங்கிணைந்ததாக வசூலிக் கப்பட வேண்டும். அதற்கு தகவல் தொழில்நுட்ப புலமையையும் நீங்கள் பெற்றிருக்க வேண்டும் என்றார் ஜேட்லி.
பற்றாக்குறை 4.1%
நடப்பு நிதி ஆண்டின் பற்றாக் குறை 4.1 சதவீதத்துக்குள் கட்டுப் படுத்தப்படும் என்று இந்நிகழ்ச்சி யில் பேசிய மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறினார்.
புதிய முதலீடுகளை ஊக்கு விப்பதற்காக பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவதை தளர்த்தும் யோசனை உள்ளதா? என்று செய்தியாளர்கள் கேட்ட தற்கு, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுவதற்காக அனைத்து சிக்கன நடவடிக்கை களும் எடுக்கப்படுகின்றன. இதன் மூலம்தான் சர்வதேச அரங்கில் இந்தியாவின் பெயரைக் காப் பாற்ற முடியும். எனவே தளர்த்தும் யோசனை இல்லை என்றார்.
ஆட்டோமொபைல் துறைக்கு அளிக்கப்பட்ட உற்பத்தி வரிச் சலுகை டிசம்பர் 31-ம் தேதி முடி வடைகிறது. அதற்குப் பிறகு இந்த சலுகை நீட்டிக்கும் உத்தே சம் உள்ளதா? என்று கேட்டதற்கு, இது குறித்து பரிசீலிக்கப்படு கிறது. டிசம்பர் 31-ம் தேதி இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT