Last Updated : 08 Dec, 2014 09:15 PM

 

Published : 08 Dec 2014 09:15 PM
Last Updated : 08 Dec 2014 09:15 PM

ஜனவரி 1 முதல் ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் கட்டணங்கள் உயர்கிறது

ஐசிஐசிஐ வங்கி ஜனவரி 1 முதல் ஏடிஎம் பயன்பாட்டு கட்டணங்களை அதிகரிக்க உள்ளது. ஏடிஎம் இயந்திரங்களில் கட்டணமில்லா பரி வர்த்தனைகள் மேற்கொள்ள புதிய கட்டுப்பாடுகளையும் கொண்டு வருகிறது ஐசிஐசிஐ வங்கி.

இந்த புதிய முறையில் ஐசிஐசிஐ வாடிக்கையாளர்கள், ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்களில் மாதம் 5 முறையும் பயன்படுத்து வதில் மாற்றமில்லை. பிற வங்கி ஏடிஎம்களில் 3 முறை பயன்படுத்து வதில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. கட்டணப் பரிவர்த்தனைகளுக்கு ரூ.20 பிடித்தம் செய்யப்படும். பணமல்லாத இதர நடவடிக்கைகளுக்கு ரூ. 8.50 தனியாக பிடித்தம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

இதன்படி பெரு நகரங்களில் பிற ஏடிஎம்களில் கட்டணமில்லாத சேவையை குறைத்துள்ளது. மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஹைத் ராபாத் உள்ளிட்ட நகரங்களில் பிற ஏடிஎம்களை பயன்படுத்தும் ஐசிஐசிஐ வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும் ரூ 20 கட்டணம் செலுத்த வேண்டும். பணமல்லாத நடவடிக்கைகளுக்கு ரூ. 8.50 பிடித்தம் செய்யப்படும். சிறிய நகரங்களில் பிற வங்கி ஏடிஎம்களில் கட்டணமில்லாமல் மாதம் 5 முறை பயன்படுத்தலாம். அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனை களுக்கு இதேபோல கட்டணங்கள் வசூலிக்கப்படும் என தெரி வித்துள்ளது.

’ஏடிஎம் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு கட்டணமில்லாமல் வழங்கி வருகிறோம். ஆனால் அதற்கு கட்டணம் செலுத்தி வருகிறோம். வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் ஐந்து பரிவர்த்தனைகளுக்கு நாங்கள் ரூ 75 முதல் ரூ.100 வரை செலவு செய்கிறோம் என்றும் ஐசிஐசிஐ கூறியுள்ளது.

ஏடிஎம் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளை சமீபத்தில் ஆர்பிஐ கொண்டுவந்தது. அதன்படி வங்கிக்கணக்கு உள்ள ஏடிஎம்களில் மாதம் 5 முறையும், பிற வங்கி ஏடிஎம்களில் மாதம் 3 முறையும் கட்டணமில்லாமல் பரி வர்த்தனைகள் மேற்கொள்ளலாம் என கூறியது. கட்டண சேவைகளுக்கான கட்டணத்தை வங்கிகளே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் ஆர்பிஐ கூறியிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x