Published : 02 Dec 2014 01:10 PM
Last Updated : 02 Dec 2014 01:10 PM

ராபர்ட் பாப் ஆலன் இகெர் - இவரைத் தெரியுமா?

$ அமெரிக்காவின் பிரபலமான வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி.

$ யூத குடும்பத்தைச் சேர்ந்தவர். டி.வி., ரேடியோ தொடர்பான படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றவர். ஆரம்பத்தில் உள்ளூர் தொலைக்காட்சியில் வானிலை அறிவிப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கினார்.

$ 1974-ம் ஆண்டு அமெரிக்க பிராட்காஸ்டிங் நிறுவனத்தில் சேர்ந்து படிப்படியாக முன்னேறி 1993-94-ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் தலைவராக உயர்ந்தார்.

$ அமெரிக்க பிராட்காஸ்டிங் நிறுவனத்தின் பிரதான நிறுவனமான கேபிடல் சிடிஸ் நிறுவனத்தை வால்ட் டிஸ்னி 1996-ம் ஆண்டு வாங்கி அதை ஏபிசி என பெயர் மாற்றம் செய்தது. இந்நிறுவனத்தின் தலைவராக 1999-ம் ஆண்டு வரை இருந்தார்.

$ 2000-வது ஆண்டு நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2005-ம்ஆண்டு தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பையும் கூடுதலாக ஏற்றார்.

$ 2006-ம் ஆண்டு பிக்ஸர் அனிமேஷன் ஸ்டூடியோ நிறுவனத்தைக் கையகப்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார். 2009-ல் மார்வெல் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தையும் 2012-ம் ஆண்டில் லுகாஸ்பிலிம் நிறுவனத்தையும் கையகப்படுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x