Published : 27 Nov 2014 11:22 AM
Last Updated : 27 Nov 2014 11:22 AM

சாம் பல்சாரா - இவரைத் தெரியுமா?

$ மேடிசன் வேர்ல்டு விளம்பர நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர்.

$ குஜராத்தில் பிறந்தவர். இவரது அப்பா பெங்களூருக்கு பிஸினஸை மாற்றியதால் பள்ளிப்படிப்பின் சில காலத்தில் இங்கு இருந்தார். பாம்மே ஜம்னாலால் பஜாஜ் இன்ஸ்டியூட்டில் எம்பிஏ படித்தவர்.

$ படித்தவுடன் சாராபாய் நிறுவனத்தில் நான்கு வருடங்கள் வேலை பார்த்தார். அதன் பிறகு கேட்பரிஸின் பிராண்ட் மேனேஜராக இருந்தார்.

$ 1984-ம் ஆண்டு முத்ரா விளம்பர நிறுவனத்தில் இணைந்தார். இங்கு ரிலையன்ஸ் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை குழுவில் ஈடுபட்டார்.

$ 1988 மேடிசன் விளம்பர நிறுவனத்தை நிறுவினார். அப்போது நெல்கோ, கோத்ரெஜ் மற்றும் மபத்லால் ஆகிய நிறுவனங்களை மட்டுமே வாடிக்கையாளராக வைத்திருந்தார்.

$ இந்திய விளம்பர நிறுவனங்களின் சங்கத்தலைவர், சர்வதேச விளம்பர விருது நியமன குழுவின் ஜூரி என விளம்பர உலகின் தவிர்க்க முடியாத நபராகத் திகழ்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x