Published : 05 Aug 2017 10:25 AM
Last Updated : 05 Aug 2017 10:25 AM
ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் மூலம் ஒரே நாளில் வாரன்பஃபெட்டுக்கு 100 கோடி டாலர் (ரூ.6587கோடி) ஆதாயம் கிடைத்துள்ளது. உலக அளவில் மிகப் பெரிய பங்கு முதலீட்டாளரான பஃபெட் ஆப்பிள் நிறுவனத்தில் 2.5 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இந்த பங்குகள் மூலம் பஃபெட்டுக்கு ஒரே நாளில் 100 கோடி டாலர் ஆதாயம் கிடைத்துள்ளது.
பஃபெட்டின் ஹாத்வே நிறுவனத்தின் வசம் ஆப்பிள் நிறுவனத்தின் 13.5 கோடி பங்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஹாத்வே நிறுவனத்துக்காக ஜனவரி மாதத்தில் 7.6 கோடி பங்குகளையும் வாங்கியுள்ளார்.
ஆப்பிள் நிறுவனம் தனது மூன்றாவது காலாண்டு முடிவை செவ்வாய்கிழமை அறிவித்தது. இதில் நிறுவனம் சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது. இதன் காரணமாக புதன்கிழமை வர்த்தகத்தில் ஆப்பிள் பங்குகள் 5.11 சதவீதம் உயர்ந்து 157.72 டாலராக இருந்தது. குறிப்பாக ஒரு பங்கு 7.67 டாலர் விலை அதிகரித்தது. இதன் காரணமாக பஃபெட்டுக்கு 103,53,19,579 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.6587 கோடி) ஆதாயம் கிடைத்துள்ளது.
தொழில்நுட்பத்துறை பங்குகளில் முதலீடு செய்வதை தவிர்க்க விரும்புதாக பபெஃட் ஏற்கெனவே கூறியிருந்தார். ஆனால் ஆப்பிள் நிறுவன பங்குகளை 2016ம் ஆண்டில் வாங்கினார். மேலும் கடந்த ஜனவரி மாதத்தில் 7.6 கோடி பங்குகளை வாங்கியுள்ளார் என்றும் சிஎன்பிசி கூறியுள்ளது.
ஆப்பிள் முதலீட்டுக்கு பிறகு பேசிய வாரன் பஃபெட், ஆப்பிள் தயாரிப்புகள் மக்களிடம் மிகவும் உணர்வு பூர்வமாக இணைந்துள்ளன. அவை பயன் அளிக்கின்றன என்பதால்தான் மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர் என்றும் குறிப்பிட்டிருந்தர்.
காலாண்டு முடிவுகள் குறித்து பேசிய ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம்குக், ஜூன் காலாண்டில் அனைத்து தயாரிப்புகளின் வளர்ச்சியும் சிறப்பாக உள்ளது. பங்கு மூலமான ஆதாயம் 17 சதவீதம் உயர்ந்துள்ளது என்று கூறினார். ஜூன் காலாண்டில் 4.1 கோடி ஐபோன்களை நிறுவனம் விற்பனை செய்துள்ளது என்றும் டிக் குக் குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT