Last Updated : 17 Aug, 2017 10:06 AM

 

Published : 17 Aug 2017 10:06 AM
Last Updated : 17 Aug 2017 10:06 AM

ட்ரம்ப் ஆலோசனை குழுவிலிருந்து விலக இந்திரா நூயிக்கு நெருக்குதல்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆலோசனைக் குழுவிலிருந்து பெப்சிகோ தலைவர் இந்திரா நூயி விலக வேண்டும் என இனவாதத்துக்கு எதிரான தன்னார்வ அமைப்புகள் நெருக்குதல் அளித்து வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் உற்பத்தி துறை ஆலோசனைக் குழுவில் இந்திரா நூயி இடம்பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் வெர்ஜீனியா மாகாணத்தில் நடந்த வெள்ளை இனத்தவர் பேரணியில் நடைபெற்ற கலவரத்தை அடுத்து பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களும் அதிபரின் ஆலோசனை குழு பொறுப்பிலிருந்து வெளியேறியுள்ளனர்.

வெர்ஜீனியாவில் ட்ரம்பின் மறைமுகமான ஆதரவுடன் இந்த பேரணி நிகழ்ந்துள்ளது. அதனால் நிறவெறிக்கு எதிரான இந்த அமைப்பு `ஆலோசனை அமைப்பிலிருந்து வெளியேறவும்’ என்கிற பிரசாரத்தையும் தொடங்கியுள்ளது.

இந்த இனவாத அரசியல் போக்கை கண்டித்து அதிபரின் ஆலோசனை குழுவிலிருந்து மெர்க், டிஸ்னி தலைவர்கள் வெளியேறியுள்ளனர். இதற்கு முன்பு டிரம்பின் இன அரசியல் காரணமாக ஊபெர், டெஸ்லா நிறுவனங்களின் தலைவர்கள் வெளியேறியுள்ளனர்.

ஆனால் பெப்சிகோ தலைவர் இந்திரா நூயி, ஐபிம் நிறுவன தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். முஸ்லிம்களுக்கு தடை, பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது போன்ற நடவடிக்கைகளை ட்ரம்ப் அரசு மேற்கொண்டுள்ளது.

ட்ரம்பின் இனவாத அரசியல் தூண்டுதலின் காரணமாக வெர்ஜீனியாவில் நடந்த பேரணி கலவத்தில் முடிந்துள்ளது, ஆனால் இவர்கள் ட்ரம்ப் ஆலோசனை குழுவிலிருந்து வெளியேற மறுக்கின்றனர் என்று அந்த அமைப்பின் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே கலவரத்தில் இரண்டு தரப்பிலும் ஒருவரை ஒருவர் பழி போடுகின்றனர் என்று ட்ரம்ப் கூறியுள்ளதுடன், உற்பத்தி குழுவிலிருந்து யார் வெளியேறினாலும் அந்த இடத்தை நிரப்ப பலர் தயாராக உள்ளனர் என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x