Published : 01 Nov 2014 11:18 AM
Last Updated : 01 Nov 2014 11:18 AM

பவிஷ் அகர்வால் - இவரைத் தெரியுமா?

$ 28 வயதில் வயதாகும் ஓலா கேப்ஸ் (Olacabs.com) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. லூதியானாவில் பிறந்தவர். இவரது பெற்றோர்கள் மருத்துவர்கள்.

$ ஐஐடி மும்பையில் கம்யூட்டர் சயின்ஸ் படித்தவர். படித்த பிறகு மைக்ரோசாப்ட் ரிசர்ச் நிறுவனத்தில் சுமார் 2 ஆண்டுகள் வரை பணிபுரிந்தார்.

$ தொழில்முனைவு மீது இருக்கும் ஆர்வத்தால் ஆகஸ்ட் 2010-ல் வேலையை விட்டார், 2011 ஜனவரியில் ஓலாகேப்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்தார். டாக்ஸியில் செல்லும் போது கிடைத்த சில அசௌகர்யமான நிகழ்வுகள் காரணமாக தன் நண்பர்கள் மூலமாக இந்தத் துறையில் இறங்கினார்.

$ ஆரம்பத்தில் வென்ச்சர் கேபிடல் நிதி திரட்ட மிகவும் கஷ்டப்பட்டார். ஆனால் சில நாட்களுக்கு முன்பு ஜப்பான் நிறுவனமான சாப்ட்பேங்க் இவரது நிறுவனத்தில் 21 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது.

$ இந்தியாவின் வளர்ச்சியில் பங்குகொள்ளுங்கள். உங்களுக்கு விருப்பமான துறையில் வேலை செய்யுங்கள் கொஞ்சம் ரிஸ்க் எடுங்கள். தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள் என தொழில்முனைவோராகும் ஆர்வத்தில் இருப்பவர்களுக்கு ஆலோசனை கூறியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x