Published : 11 Apr 2014 10:40 AM
Last Updated : 11 Apr 2014 10:40 AM

`கிரவுட் ஃபண்டிங்’: விரைவில் புதிய வழிகாட்டு நெறி

இளம் முதலீட்டாளர்களை பங்குச் சந்தையில் ஊக்குவிப்பதற்காக புதிய வழிகாட்டு நெறிகளைக் கொண்டு வரப் போவதாக பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவர் யு.கே. சின்ஹா தெரிவித்தார்.

பங்குச் சந்தையில் முதலீடு திரட்டும் இளம் தலைமுறையினரின் விகிதம் மிகக் குறைவாக உள்ளது. குழுக்களாக சேர்ந்து முதலீடு திரட்டுவதை ஊக்குவிப்பதற்காக கிரவுட் ஃபண்டிங் முறையை எளிமைப்படுத்த உள்ளதாக அவர் கூறினார்.

இளம் தொழில் முனைவோர் இத்தகைய முதலீடுகளை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என்று மும்பையில் ஐஎம்சி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசுகையில் அவர் தெரிவித்தார்.

கிரவுட் ஃபண்டிங் முறையானது தொழில் முனைவோர் அல்லது சிறு குழுக்களைக் கொண்ட பிரிவினர் பங்குச் சந்தையில் முதலீடு திரட்டு வதாகும். ஆன்லைன் உள்ளிட்ட பல்வேறு தளங்கள் மூலம் இத்த கைய முதலீடு திரட்டலாம்.

இத்தகைய முதலீடுகளுக்கு பின்னாளில் உரிய லாபத் தொகை அளிக்கப்படும். ஆனால் இத்தகைய முறை இந்திய பங்குச் சந்தையில் அவ்வளவாக பிரபலமாகவில்லை. அமெரிக்கா, சீனா, பிரிட உள்ளிட்ட நாடுகளில் இது மிகவும் பிரலமான முறையாகும். இத்தகைய முதலீடுகளுக்கு சமூக வலைத்தளங்களும் அங்கு உதவியாக உள்ளன என்றும் சின்ஹா குறிப்பிட்டார்.

சர்வதேச செக்யூரிட்டிஸ் கமிஷன் (9ஐஓஎஸ்சிஓ) எனும் சர்வதேச அமைப்பானது உலகம் முழுவதிலுமுள்ள பங்குச்சந்தை செயல்பாடுகளை கண்காணிக்கும் அமைப்பாகும். சமீபத்தில் இந்த அமைப்பு கிரவுட் ஃபண்டிங் முறையைக் கண்காணிக்குமாறு அனைத்து பங்கு பரிவர்த்தனை அமைப்புகளுக்கும் உத்தரவிட்டிருந்தது. இந்த பரிவர்த்தனையில் எதிர்காலத்தில் தவறு ஏற்படாமல் இருக்குமாறு பார்த்துக்கொள் ளும்படி அறிவுறுத்தி யிருந்தது.

பங்குச் சந்தையில் முதலீடு திரட்ட கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ. 60 ஆயிரம் கோடி திரட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் இத்தொகை திரட்டப்படவேயில்லை. இதற்கான அனுமதிக் காலமும் காலாவதி யாகிப் போய்விட்டதாக சின்ஹா குறிப்பிட்டார். பங்குச் சந்தையில் பட்டியலிடப் படாமல் நிதி திரட்ட செபி அனுமதிக்கும் முறைக்கு மிகச் சிறந்த வரவேற்பு உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய முறை நிறுவனங்கள் பங்குகளை ஏலம் கேட்பது, தனியார் பங்கு பரிவர்த்தனை, துணிக முதலீடு உள்ளிட்டவற்றுக்கு மிகச் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது என்றார்.

வாடிக்கையாளர் விவரத்தை அறிந்து கொள்வது (கேஒய்சி) தொடர்பான விண்ணப்பங்களை மேலும் எளிமைப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர் கள் பல்வேறு முதலீடுகளை மேற்கொண்டிருந்தாலும், ஒரே படிவத்தில் அனைத்து தகவல் களையும் அளிக்கும் நடைமுறை இந்த ஆண்டு அமல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

வெளிநாடு வாழ் இந்தியர்களும் (என்ஆர்ஐ) கேஒய்சி படிவத்தைப் பூர்த்தி செய்து பங்குச் சந்தையில் முதலீடு செய்ய முடியும். என்ஆர்ஐ-களுக்கான வழிகாட்டு நெறிகள் விரைவில் வெளியாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x