Published : 17 Feb 2014 12:48 PM
Last Updated : 17 Feb 2014 12:48 PM
பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் வெளி நாடுகளில் இன்றைய தினத்தில் வேலை செய்து வருகிறார்கள். இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் வாய்ப்புகள் குறைவாக இருந்தன.
ஆனால், இன்றோ உலக அளவில் இருந்து இந்தியாவில் வந்து வேலை செய்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். இவர்கள் பலரும் கொரியா, சீனா, அமெரிக்கா மற்றும் பல ஜரோப்பிய நாடுகளில் இருந்து வருகின்றனர்.
இவ்வாறு பல வளர்ந்த பொருளாதாரங்களிலிருந்து இந்தியாவில் வந்து வேலை செய்வது ஒன்றைத்தான் குறிப்பிடுகிறது - இந்தியாவில் அறிவு பொருளாதாரத்திற்கு உண்டான வாய்ப்புகள் மிக மிக அதிகமாகி வருகின்றன. வெளிநாட்டவரே இந்தியாவில் வந்து செட்டில் ஆகும் பொழுது, நமது வெளிநாடுவாழ் இந்தியர்கள் யோசிக்காமலா இருப்பார்கள்? வெளிநாடுகளில் ஜந்து/ பத்து/ பதினைந்து ஆண்டுகள் பணி புரிந்து விட்டு இந்தியாவில் வந்து வேலை தேடி கொண்டோ அல்லது தொழில் ஆரம்பித்து கொண்டோ செட்டில் ஆகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் வந்து செட்டில் ஆக நினைக்கும் நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால், கீழ்கண்டவற்றை திட்டமிட்டுக் கொள்வது உங்களுக்கு நன்மை பயக்கும்:
இந்தியாவில் வந்து செட்டில் ஆவதற்கு ஓரிரு ஆண்டுகள் முன்னரே போதுமான அளவு மருத்துவக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீட்டை (டேர்ம் இன்சூரன்ஸ்) எடுத்துக் கொள்வது நல்லது. இன்று இந்தியாவில் வெளிநாடு களைப் போல வீட்டு வாடகை மிகவும் அதிகமாக இருப்பதால், நீங்கள் வெளிநாடுகளில் இருக்கும் பொழுதே இந்தியாவில் ஒரு வீட்டை வாங்கிக் கொள்வது நல்லது.
உங்களது ஓய்வு காலம் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக போதுமான முதலீட்டை இந்தியா வரும் முன்னரே செய்து கொள்ளுங்கள். மேற்கண்ட மூன்று பாயிண்டுகளையும் இந்தியா வரும் முன்னரே கவனித்துக் கொண்டீர்களேயானால், இந்தியா வந்து செட்டில் ஆகும் பொழுது உங்களுக்கு பாரங்கள் குறைவாக இருக்கும்.
மேலும் சம்பாத்தியம் சிறிது குறைவாக இருந்தாலும் இந்தியா வில் வாழ்க்கை நடத்துவதற்கு சுலபமாக இருக்கும். ஒரு வேளை இந்தியா வந்து செட்டில் ஆகாவிட்டாலும், நீங்கள் இந்தியாவில் செய்த முதலீடு கள் நீண்ட காலத்தில் நல்ல வருமானத்தை தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
www.prakala.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT