Published : 13 Jan 2014 10:43 AM
Last Updated : 13 Jan 2014 10:43 AM
தொழிலதிபர் அனில் அகர்வாலுக்குச் சொந்தமான வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தின் சுரங்கப் பணிக்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது. இந்நிறுவனம் ஒடிசா மாநிலம் நியாம்கிரி மலைப்பகுதியில் பாக்ஸைட் தாதுவை வெட்டியெடுக்க அனுமதி கோரியிருந்தது.
இங்கிருந்து வெட்டியெடுக்கப்பட உள்ள பாக்ஸைட் தாதுவை லாங்கிகரில் உள்ள தனது அலுமினிய சுத்திகரிப்பு ஆலையில் சுத்திகரிக்க வேதாந்தா திட்டமிட்டிருந்தது. ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.
ஏற்கெனவே இதற்கு உள்ளூர் கிராம சபை அனுமதி மறுத்திருந்தது. அதனடிப்படையில் அனுமதி மறுக்கப்பட்டதாக மொய்லி தெரிவித்தார். கிராமசபையின் கருத்தை மாநில அரசு மத்திய அரசுக்கு தெரிவித்தது. இதனடிப்படையில் சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT