Published : 26 Jul 2016 08:18 PM
Last Updated : 26 Jul 2016 08:18 PM
நிலையான, நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய வங்கியின் சுதந்திரமான செயல்பாடு அவசியம் என்று ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் மீண்டுமொரு முறை வலியுறுத்தியுள்ளார்.
மும்பையில் ஆர்பிஐ தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற 10-வது புள்ளியியல் நாள் மாநாட்டில் ரகுராம் ராஜன் பேசியபோது கூறியதாவது:
பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய வங்கி ஆதரவளிக்க சிறந்த வழி பணவீக்கத்தை குறைவாகவும் ஸ்திரமாகவும் வைத்திருப்பது என்பதே முக்கியம்.
அரசியல் பிற்சாய்வு இல்லாமல், பணவீக்கம் அதிகரிக்கும் போது, பரந்துபட்ட பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் நிறுவன பலத்தை கட்டி எழுப்புவது அவசியம்.
இதனால்தான் அடுத்தடுத்த ஆட்சிகள் ஆர்பிஐ இயங்குவதற்கு ஒரு சுதந்திரத்தை வழங்கி வந்துள்ளன.
கடன் தேவை பிரச்சினையை வட்டி விகிதத்தை குறைப்பதன் மூலம் மட்டுமே தீர்மானிக்க முடியாது. மாறாக பொதுத்துறைக் வங்கி பேலன்ஸ் ஷீட்கள் சுத்தமாக வேண்டும் (வாராக்கடன், செயலில் இல்லாத சொத்துக்கள், வங்கிக் கடன் திருப்பிச் செலுத்தாத போக்கு) இந்த நடைமுறை தற்போது நடைபெற்று வருகிறது, இதனை அதன் தர்க்கபூர்வ முடிவுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு கூறினார் ரகுராம் ராஜன்.
பாஜக-வின் சுப்பிரமணியன் சுவாமி இவரது வட்டி விகிதக் கொள்கைதான் நாட்டின் வளர்ச்சியைக் கெடுத்து விட்டது என்றும் இவரை தொடர அனுமதிக்கக் கூடாது என்றும் நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பிரதமருக்கு இருமுறை கடிதம் எழுதினார்.
இது குறித்து ரகுராம் ராஜன் சூசகமாக குறிப்பிட்ட போது, ஆதாரங்கள் எதுவும் இல்லாத வாதங்கள் மூலம் மத்திய வங்கியின் செயல்பாடுகளை விமர்சிக்கும் போக்கு பரவலாகி வருகிறது என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT