Published : 08 Oct 2013 04:02 PM
Last Updated : 08 Oct 2013 04:02 PM
கிறிஸ்டின் லகார்ட் - தலைவர், ஐஎம்எஃப்
#1956-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பாரீஸில் பிறந்தவர்.
#ஆங்கில இலக்கியத்தில் முதுகலை, தொழிலாளர் சட்டம், சமூக சட்டம் பயின்றவர்.
#பிரான்ஸில் தொழிலாளர் கட்சியிலிருந்து அரசியல்வாதியானவர். பொருளாதார விவகாரத்துறை, நிதித்துறை, தொழில்துறை, வேளாண் மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர்.
#ஜி-8 மாநாட்டில் பங்கேற்ற முதல் பெண் நிதி அமைச்சர்
பேக்கர் அண்ட் மெக்கன்ஸீ நிறுவனத்தின் முதலாவது பெண் தலைவர் என்ற பெருமையைப் பெற்றவர்.
#2009-ல் ஐரோப்பிய பிராந்தியத்தில் மிகச் சிறந்த நிதியமைச்சர் என்ற பெருமையைப் பெற்றவர். உலகின் அதிகாரம் மிக்க பெண்களில் 8-வது இடத்தில் இருப்பதாக ஃபோர்ப்ஸ் இவரை அடையாளம் காட்டியுள்ளது.
#2011 ஜூலை 5-ம் தேதி சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) தலைவராக நியமிக்கப்பட்டார். ஐஎம்எஃப் தலைவராக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையும் இவரையே சாரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT