Last Updated : 15 Mar, 2014 12:28 PM

 

Published : 15 Mar 2014 12:28 PM
Last Updated : 15 Mar 2014 12:28 PM

Banking Ombudsman - என்றால் என்ன?

வங்கி வாடிக்கையாளர்களின் புகார்களை நடுநிலையோடு விசாரித்து விரைவாக குறைந்த செலவில் தீர்வு காண்பதற்காக உருவாக்கப்பட்டது Banking Ombudsman. ஒவ்வொரு மாநில தலைநகரிலும் ரிசர்வ் வங்கியால் ஒர் உயர் அதிகாரி Banking Ombudsman- ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

உங்கள் வங்கி தொடர்பான புகாரினை வங்கியிடம் முதலில் தெரிவிக்கவேண்டும். அவர்கள் பதில் அளிக்கவில்லை என்றாலோ, அல்லது உங்களுக்கு திருப்தி அளிக்கக்கூடிய வகையில் பதில் அளிக்கவில்லை என்றாலோ, ombudsman னை அணுக வேண்டும்.

வங்கியின் சேவைகள் தொடர்பாக எந்த ஒரு புகாரையும் இவரிடம் அளிக்கலாம். ஒவ்வொரு வங்கி கிளையிலும் அவ்வங்கியின் ombudsman பெயர், அலுவலக முகவரி இருக்கும். அதனை அறிந்து அவருக்கு உங்கள் புகார் மனுக்களை அனுப்பலாம். புகார் அளிப்பதற்கு சேவைக் கட்டணம் ஏதும் இல்லை.

Deposit insurance and credit guarantee corporation (DICGC)

இந்நிறுவனம் வங்கிகளில் உள்ள வைப்பு நிதிகளுக்கு காப்பீடு வழங்குகிறது. நிறுவனம் வைப்பு கணக்கில் உள்ள முதல் மற்றும் வட்டித் தொகைக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்குகிறது. அதாவது ஒவ்வொரு வங்கியும் இந்நிறுவனத்திடம் வைப்புத் தொகை காப்பீடு பாலிசி வாங்கியுள்ளன.

அதன்படி, ஒரு வங்கி தன் வாடிக்கையாளருக்கு வைப்புத்தொகை மற்றும் வட்டியை கொடுக்கமுடியவில்லை என்றால் முதல் மற்றும் வட்டித் தொகையின் கூட்டு ஒரு லட்சம் வரை இருந்தால் அத்தொகையையும், அதைவிட அதிகமாக இருந்தால் ஒரு லட்சம் காப்பீடாக தரப்படும். ஆக, உங்கள் வங்கி திவாலானாலும் அதிகபட்சம் உங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிச்சயம் கிடைக்கும்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x