Published : 24 Dec 2013 12:00 AM
Last Updated : 24 Dec 2013 12:00 AM
கடந்த வாரத்தில் ஐரோப்பாவின் முக்கியமான சில்லறை வர்த்தக நிறுவனமான டெஸ்கோ இந்தியாவில் முதலீடு செய்யும் திட்டத்தை உறுதி செய்தது. அந்த உற்சாகம் காரணமாக இன்னொரு ஐரோப்பிய நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.இருந்தாலும் புதிதாக வரப்போகும் அந்த ஐரோப்பிய நிறுவனம் எது என்பதை தெரிவிக்க ஆனந்த் சர்மா மறுத்துவிட்டார்.
சில்லறை வர்த்தகத் துறையில் அன்னிய முதலீட்டை அனுமதித்து ஒரு வருடத்துக்கு பிறகு, டாடா நிறுவனத்தின் துணையுடன், 110 மில்லியன் டாலர் முதலீடு செய்ய டெஸ்கோ நிறுவனம் முடிவு செய்தது. இந்தியாவின் அன்னிய நேரடி முதலீட்டு கொள்கை பாதுகாப்பானது மற்றும் கவர்ச்சிகரமானதும் கூட என்று அன்னிய முதலீட்டாளர்களின் கவலைகளுக்கு பதில் அளித்தார்.
சமீப காலமாக பாரதிய ஜனதா கட்சியும், அந்த கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி அன்னிய முதலீட்டாளர்களுக்கு பயம் அளிக்கும் விதமாக பேசி வருகிறார்கள். பாரதிய ஜனதா கட்சி புதிய நேரடி அன்னிய முதலீட்டு கொள்கையை எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது என்றார். ஐரோப்பிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய தயாராக இருந்தாலும், அமெரிக்காவின் முன்னணி சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட், புதிய நேரடி அன்னிய முதலீட்டு கொள்கைகளின் இந்தியாவில் முதலீடு செய்ய மாட்டோம் என்று சொல்லி இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT