Published : 28 Mar 2014 09:49 AM
Last Updated : 28 Mar 2014 09:49 AM
போப்பாண்டவர் பிரான்சிஸை முதல்முறையாக நேற்று சந்தித்துப் பேசினார் அமெரிக்க அதிபர் ஒபாமா. வாடிகன் சிட்டியில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
சர்வதேச அளவில் மக்களி டையே நிலவும் பேதங்களுக்கு எதிராக போராடுவது, தன்பாலின உறவாளர்கள் உரிமை, கருக் கலைப்பு, கருத்தடை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து போப்பிடம் ஒபாமா விவாதித்தார்.
அப்போது தான் வியந்து பார்க்கும் மனிதர்களில் நீங்களும் ஒருவர் என்று போப் பிரான்சிஸிடம் ஒபாமா கூறியுள்ளார். எனினும் அமெரிக்காவில் உள்ள கத்தோலிக்க வாக்காளர்களை கவர்வதற்காகவே இந்த சந்திப்பை ஒபாமா நடத்தியுள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி உள்ளிட்ட அமெரிக்க குழுவினர் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்புக்குப்பின் செய்தி யாளர்களிடம் பேசிய ஒபாமா, உலகம் முழுவதும் ஏராளமான மக்களின் ஆன்மிக வழிகாட்டி யாகவும், முன்னோடியாகவும் போப் உள்ளார். அவரால் கவரப்பட் டவர்களில் நானும் ஒருவன். இவ்வாறு கூறுவதற்காக அனைத்து விஷயங்களிலும் நாங்கள் ஒரே கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளோம் என்று அர்த்தமல்ல என்றார்.
உக்ரைனில் கிரைமியா பகுதியை ரஷ்யா ஆக்கிரமித்துள்ள விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக ஒபாமா 6 நாள் பயணமாக ஐரோப் பாவுக்கு சென்றுள்ளார். இத்தாலியின் புதிய பிரதமர் மட்டியோ ரென்ஸி, பிரதமர் ஜார்ஜியோ நெபோலிடானோ ஆகியோரையும் ஒபாமா சந்திக்க இருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT