Published : 13 Jun 2016 07:08 PM
Last Updated : 13 Jun 2016 07:08 PM
மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் லிங்க்டு இன் கார்ப்பரேஷனை 26.2 பில்லியன் டாலர்கள் தொகைக்கு வாங்க ஒப்புக் கொண்டுள்ளது. இதனை இரு நிறுவனங்களும் அறிக்கை மூலம் உறுதி செய்தன.
அதாவது பங்கு ஒன்றிற்கு 196 டாலர்கள் வழங்க மைக்ரோசாப்ட் ஒப்புக் கொண்டது லிங்க்டு இன் நிறுவனத்தின் இன்றைய பங்குச் சந்தை இறுதி விலையைக் காட்டிலும் 49.5% பிரீமியம் விலையாகும்.
லிங்க்டு இன் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாக ஜெஃப் வெய்னர் நீடிப்பார், இவர் மைக்ரோசாப்ட் சி.இ.ஓ. சத்யா நாதெள்ளா கீழ் பணியாற்றுவார். 2016-ல் இந்த ஒப்பந்தம் முழுதும் கைகூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT