Published : 20 Mar 2014 12:48 PM
Last Updated : 20 Mar 2014 12:48 PM

நீலம் தவான் - இவரைத் தெரியுமா?

$ ஹியூலெட் பக்கார்ட் (இந்தியா) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்.

$ ஏஷியன் பெயின்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனி லீவர் நிறுவனங்களில் தனது பணியை தொடங்கிய இவர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குநராக 2005-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டுவரை இருந்தார். ஹெச்சிஎல் மற்றும் ஐபிஎம் நிறுவனங்களில் முக்கிய பதவிகளை வகித்த அனுபவமும் உண்டு.

$ ஐ.டி. துறை மிகவும் வித்தியாசமானது. எத்தகைய அனுபவசாலிகளுக்கும் சிறந்த தலைவர்களுக்கும் இது மிகுந்த சவாலான துறை என்று கூறுபவர். இலக்கு இல்லாத செயல்பாடு இத்துறையின் உச்சியில் பாதிக்குக் கொண்டு சென்றுவிடும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்.

$ டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டமும், டெல்லி பல்கலைக் கழகத்தில் நிர்வாகவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர்.

$ மிகச் சிறந்த தொழில் முனைவோர், மிகச் சிறந்த பெண் நிர்வாகி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x