Published : 04 Oct 2014 10:25 AM
Last Updated : 04 Oct 2014 10:25 AM
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஏழை, பணக்காரன் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது. இந்த பிராந்தியத்தில் ஏழைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஆசிய பசிபிக் பிராந்தியத்துக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சமூக, பொருளாதார ஆணையம் (யுஎன்-இஎஸ்சிஏபி) தெரிவித்துள்ளது.
இந்தியா, சீனா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் வருமானத்தில் அதிக அளவு ஏற்றத் தாழ்வு நிலவுவதாக அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஏற்றத் தாழ்வு என்பது இப்பிராந்தியத்தில் நிலவும் மிக முக்கியமான சமூக, பொரு ளாதார பிரச்சினையாகும். கடந்த 20 ஆண்டுகளில் இப்பிராந்தி யங்களில் பெருநகரங்களில் வருமானத்தில் பெருமளவு ஏற்றத் தாழ்வு நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட பிராந்தியம் அல்லது சமூகத்தில் காணப்படும் பொருளாதார ஏற்றத் தாழ்வு மிகப் பெரிய சமூக, பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
வருமானத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளைக் கணக்கிடுவதற்கு 1990-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரையிலான காலம் எடுத்துக்கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட 10 ஆண்டு இடை வெளியில் ஏற்றத்தாழ்வு விகிதம் 30.8 புள்ளியிலிருந்து 33.9 புள்ளியாக உயர்ந்துள்ளது. சீனாவில் இது 32.4-லிருந்து 42.1 புள்ளியாக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவில் இது 29.2 புள்ளியிலிருந்து 38.1 புள்ளியாக அதிகரித்துள்ளது.
இதே காலகட்டத்தில் சில நாடுகளில் இந்த ஏற்றத்தாழ்வு குறைந்துள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இதன்படி கம்போடியா, கிர்கிஸ்தான், மலேசியா, நேபாளம், பிலிப்பின்ஸ், தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் ஏழை, பணக்காரன் இடையிலான ஏற்றத் தாழ்வு குறைந்துள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த கூலியில் தொழிலாளிகள் கிடைப்பது, போதிய அளவில் தொழிலா ளர்களுக்கு பாதுகாப்பு கிடைக் காதது. கல்வித் தரம் குறைவாக இருப்பது, கடன் கிடைப்பதில் சிரமம், ஒரு தரப்பினர் அதிக அளவில் அசையா சொத்துகளில் கவனம் செலுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள்தான் ஏற்றத் தாழ்வுக்குக் காரணம் என பட்டியலிடப்பட்டுள்ளது.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஏழை, பணக்காரர்கள் எண் ணிக்கை அதிகரிப்பதோடு, இடைவெளியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நாடுகளின் மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் ஏழைகளாக உள்ளனர். இவர்களில் 10 சதவீதம் பேர் தேசிய வருமான சராசரி அளவில் 10 சதவீதத்தையே ஊதியமாக பெறுகின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 40 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த பிராந்தியத்தில் அதிக சொத்து உள்ள தனி நபர் எண்ணிக்கை அதாவது 3 கோடி டாலருக்கும் மேலாக சொத்து உள்ளவர்களின் அளவு 30 சதவீதமாக உள்ளது. இது இந்த பிராந்தியத்தில் மொத்த வருவாயில் 30 சதவீதமாகும்.சொத்து குவிக்கும் போக்கு அதிகரித்ததே ஏற்றத் தாழ்வு அதிகரித்துள்ளதற்கு முக்கியக் காரணமாகும். சொத்து, வருமானம் அதிகரித்ததற்கு நாட்டின் மொத்த வருவாய் அதிகரிப்பும் முக்கியக் காரணமாகும். இதனால் பணக்காரர்கள் ஒரு சதவீதம் இருந்தால் ஏழைகளின் எண்ணிக்கை 20 சதவீத மாக உள்ளதாக அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
பெரும்பாலும் நகர்ப்புறம், கிராமப்புறங்களிடையிலான பிளவு ஏற்றத்தாழ்வு அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகும். பன்முக சமூகம் உள்ள நாடுகள் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத நாடுகளில் ஏழை, பணக் காரன் இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT