Published : 27 Jun 2016 03:03 PM
Last Updated : 27 Jun 2016 03:03 PM
ஆர்பிஐ துணை கவர்னர் உர்ஜித் படேல், முன்னாள் துணை கவர்னர்கள் ராகேஷ் மோகன் மற்றும் சுபிர் கோகரன், எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா ஆகியோர் ஆர்பிஐ கவர்னர் பொறுப்புக்கு பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ஆர்பிஐ கவர்னர் பதவிக்கான பட்டியல் 4 பேர் கொண்டதாக சுருக்கப்பட்டுள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் புதிய நிதிக்கொள்கை கமிட்டியும் விரைவில் தேர்வு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் 2-ம் முறை பதவி நீட்டிப்பு கோரப்போவதில்லை, கல்வித்துறைக்குத் திரும்பப் போவதாக கூறி வர்த்தக உலகை அதிர்ச்சியில் ஆழத்தினார்.
இதனையடுத்து கொள்கை தொடர்ச்சியை உறுதி செய்ய ஆர்பிஐ கவர்னருக்கு தேர்ந்தெடுக்கும் நடைமுறை சுறுசுறுப்படைந்தது.
ஆர்பிஐ-யின் நிதிக்கொள்கை கமிட்டியின் புதிய 6 உறுப்பினர்களில் 3 பேர் வெளியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதனை தேர்ந்தெடுக்கும் குழுவில் ரகுராம் ராஜன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்தும் சரியாக நடந்தால் புதிய பணக்கொள்கை குழு வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி அமைக்கப்படலாம் என்று அதிகாரி ஒருவர் உறுதி அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT