

இந்திய பங்குச்சந்தை, வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் துவங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 57.56 புள்ளிகள் உயர்ந்து 20,940.45 புள்ளிகலிலும் நிப்டி 17.30 புள்ளிகள் உயர்ந்து 6,206.65 என்ற நிலையிலும் உள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவின் போது, டாடா ஸ்டீல், ஆக்ஸிஸ் வங்கி, ஐடிசி, பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் லாபத்தை அடைந்ததன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 467.38 புள்ளிகள் உயர்ந்து 20,882.89 என்ற நிலையிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 133.07 புள்ளிகள் உயர்ந்து 6,155.33 என்ற நிலையிலும் வர்த்தகம் நிறைவு பெற்றது.