Last Updated : 09 Jan, 2014 09:52 AM

 

Published : 09 Jan 2014 09:52 AM
Last Updated : 09 Jan 2014 09:52 AM

Predatory pricing - என்றால் என்ன?

புதிய உற்பத்தியாளர்கள் சந்தைக்குள் நுழைவதைத் தடுக்கும் நோக்கத்தோடு, உற்பத்திச் செலவைவிட குறைவாக பொருளின் விலையை நிர்ணயித்து விற்பனை செய்வது predatory pricing. பொதுவாக குறைந்த விலையில் அதிக அளவு பொருட்களை விற்று, போட்டியாளர்களை சந்தையிலிருந்து வெளியேற்றுவதும் predatory pricing தான். இதற்கு dumping என்ற பெயரும் உண்டு.

பெரிய நிறுவனங்கள், அதிக முதலீடு இருப்பதால், சிலகாலம் வரை நஷ்டத்தை தாங்கமுடியும் என்பதால், predatory pricing முறையில் போட்டி நிறுவனங்களை வெளியேற்ற இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும். இது சந்தையில் சமமான போட்டி நிலவுவதைத் தவிர்க்கும் நோக்கோடு செய்வதால், எல்லா நாடுகளிலும் இது போன்ற விலை நிர்ணயிக்கும் முறை சட்ட விரோதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் கூட இம்மாதிரியான முயற்சியை முறியடிக்க Competition commission of Indiaவை அணுகலாம்.

price leadership

இந்த விலை நிர்ணயிக்கும் முறை வெவ்வேறு அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு சந்தையில் உள்ள பெரிய நிறுவனம் நிர்ணயிக்கும் விலையில் அச்சந்தையில் உள்ள சிறிய நிறுவனங்கள் அந்த விலையை ஏற்று பொருட்களை விற்பனை செய்தால், அந்த பெரிய நிறுவனத்திற்கு price leadership உள்ளதாக கூறலாம். பொதுவாக சந்தையில் உள்ள பொருளின் தேவையில் பெரும் பகுதியை அந்த பெரிய நிறுவனமே பூர்த்திசெய்துவிடுவதால், அந்நிறுவனத்தை மற்ற சிறிய நிறுவனங்கள் விலை நிர்ணயத்தில் பின்பற்றுவது இயற்கையாக நடக்கக்கூடியது.

சில நேரங்களில் ஒரு சந்தையின் போக்கை முன்கூட்டியே அறிந்து பொருளின் விலையை சரியாக ஒரு சிறிய நிறுவனம் கூட நிர்ணயிக்கலாம், அந்த சூழலில் அந்த சிறிய நிறுவனம் price leadership தகுதியை பெரும். உற்பத்தி செலவுகள் எவ்வாறு மாறும் மற்றும் பொருளின் தேவையில் எவ்வித மாற்றம் ஏற்படும் என்ற சந்தையின் நிலையை துல்லியமாக அறிந்து செயல்படுவதால் அச்சிறிய நிறுவனத்திற்கு price leadership தகுதி கிடைக்கிறது.

ஒரு நிறுவனத்தின் price leadership-யை மற்ற நிறுவனங்கள் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்? ஒரு பெரிய நிறுவனத்தின் price leadership-யை மற்ற சிறிய நிறுவனங்கள் ஏற்றுக்கொள்வதற்கு காரணம், ஒவ்வொரு நிறுவனத்தின் விற்பனையும் மிக சிறியதாக இருப்பதால், அச்சிறிய நிறுவனம் தன்னிச்சையாக பொருளின் விலையை நிர்ணயிக்க முடியாது. ஒரு சிறிய நிறுவனத்தின் price leadership-யை ஏற்றுகொள்வதற்கு காரணம் சந்தையை அறிந்துக்கொள்வதில் அந்நிறுவனத்தின் தனி சிறப்புத் தகுதியாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x