Published : 01 May 2014 02:49 PM
Last Updated : 01 May 2014 02:49 PM

தொழிலில் கடைப்பிடிக்க வேண்டிய எளிய வழிமுறைகள்

தொழில்களில் கடைப்பிடிக்க வேண்டிய எளிய வழிமுறைகளைப் பற்றிக் இப்போது காண்போம்.

பல சிறு தொழிலதிபர்கள் செய்யும் முக்கியமான தவறு என்னவென்றால், தங்களது வரவு செலவையும் தொழிலின் வரவு செலவையும் பின்னிப் பிணைந்து குழப்புவதுதான். உங்களின் வரவு செலவுக்கென்று தனியாக ஒரு வங்கிக் கணக்கையும், பணப்பெட்டியையும் வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் தொழிலின் வரவு செலவுக்கும் தனியாக வங்கி கணக்கையும், பணப்பெட்டியையும் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் புரொப ரைட்டர் முறையில் தொழில் செய்யும் பட்சத்தில் உங்களுக் கும் தொழிலுக்கும் சேர்ந்து ஒரே வரிதாக்கல்தான். இருந்த போதிலும் உங்கள் தொழில் கணக் கில் இருந்து உங்கள் வங்கி கணக்கிற்கு, சொந்த செலவிற் காக மாத மாதம் மாற்றிக் கொள்ளுங்கள். இத்தொகை தொழில் ஆரம்பித்த காலத்தில் குறைவாகவும், தொழில் வளர வளர அதிகமாகவும் இருக்கும். இப்பணத்தை உங்களின் குடும்பச் செலவுகளான பள்ளிக் கட்டணம், மளிகை, காய்கறிகள், மருத்துவம், துணிமணிகள் போன்ற செலவுகளுக்காக வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் தொழில் நல்ல லாபத்தில் நடந்து வரும் பட்சத்தில், உங்கள் தொழில் சம்பந்தப்பட்ட செலவுகளான வாகனம், பிரயாணம், தொலை பேசிகள் மற்றும் பிற தொழில் சார்ந்த செலவுகளை தொழில் வங்கிக் கணக்கிலிருந்து / பணப் பெட்டியிலிருந்து செலவழி யுங்கள். இவ்வாறு பிரித்து செலவழிக்கும்போது தொழில் பாதிப்படையாமல் இருக்கும். மேலும் தொழிலுக்கு எவ்வளவு தேவைப்படுகிறது என்ற அளவும் கிட்டும்.

உங்கள் தொழிலில் இருந்து நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய லாபத்தைப் பொருத்து, இவ் வகை செலவுகளை நீங்கள் வருடா வருடம் ஏப்ரல் மாதத்தில் திட்டமிட்டுக் கொள்ளலாம். இவ் வாறு திட்டமிட்டுக் கொள்ளும் பொழுது உங்கள் தொழில் சார்ந்த வங்கி கணக் கில் இருந்து காசோலை திருப்பி அனுப்பப்படுவதோ, அல்லது கடைசி நிமிடத்தில் வெளியில் அதிக வட்டிக்கு சென்று பணம் வாங்கும் நிலையோ ஏற்படாது. உங்களின் டென்ஷனும் குறையும். அதே போல் நீங்கள் புரொபரைட்டர் முறையில் தொழில்செய்யும் பொழுது, உங்கள் தகுதிக்கு மீறி கமிட்மெண்டை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். அதிகமான புரொபரைட்டர்கள் தனது தொழில் இவ்வருடம் நன்றாக இருக்கும், இவ்வருடம் லாபம் நன்றாக இருக்கும் என்று எண்ணி நகைகளை/ இடங்களை வாங்குவார்கள் அல்லது இன்ஷூரன்ஸ் போன்ற திட்டங்களில் வரம்புக்கு மீறி கமிட் செய்து விடுவார்கள். பிறகு அத்தவணைத் தொகை வரும் பொழுது பணம் கட்டுவதற்கு திக்குமுக்காடுவார்கள்.

இவற்றை எல்லாம் தவிர்ப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் நாம் ஏற்கெனவே கூறியது போல நிதித்திட்டமிடல் அவசியமாகிறது. அவ்வாறு செய்யும்பட்சத்தில் உங்களின் வருட லாபம் உங்களுக்குப் புரியும். அதிலிருந்து நீங்கள் 65%-ற்கு கமிட் செய்து கொள்ளலாம். நீங்கள் திட்டமிட்டதைப்போல் லாபம் இருக்கும் பட்சத்தில் அவ்வருடம் முடிவில் மீதி 35%-ஐ மொத்த முதலீடாக செய்து கொள்ளுங்கள். ஒரு வேளை அவ்வருடம் லாபம் சிறிது குறைகின்ற பட்சத்தில், உங்களின் கமிட்மெண்ட் 65%-தான் என்பதால் உங்களுக்குக் கவலை இருக்காது.

அதைப்போல நீங்கள் செய்யும் ஒவ்வொரு தொழில் சார்ந்த செலவிற்கும் ரசீது வைத் துக் கொள்வது சாலச் சிறந்தது. முடிந்தவரை வங்கிக் கணக்கு மூலமாக வரவு செலவை செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் அது உங்களுக்கு ஒரு பதிவாக இருக்கும். மேலும் நமக்கோ அல்லது நீங்கள் பணம் கொடுத்தவருக்கோ மறதி ஏற்படும்போது வங்கி பாஸ்புக் அல்லது ஸ்டேட்மெண்ட் உங் களுக்கு உதவியாக இருக்கும். நீங்கள் சில செலவுகளுக்கு பணமாகத் தான் கொடுக்க வேண்டி இருக்கும். அதுபோல் நீங்கள் பணப்பெட்டியில் இருந்து எடுத்து செய்யும் சில செலவு களுக்கு ஒரு நோட் வைத்து உடனடியாகக் குறித்துக் கொள் ளுங்கள்.

பணப்பெட்டியையும் நோட் டையும் வாரத்திற்கு ஒரு முறையாவது சரி பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வாறு பணம் கொடுத்துச் செய்யும் செலவுகளுக்கு ரசீதுடன் வவுச்சர் போட்டு வைப்பது நல்லது.

அதேபோல் உங்களது செலவுகளை வகைப்படுத்தி கணினியிலும், அட்டை ஃபைல்களிலும் ரசீதுகளையும் பிற விவரங்களையும் சேகரித்து வைப்பது வருட முடிவில் உங் களுக்கு உதவியாக இருக்கும். அதை தினசரி பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

முடிந்தவரை நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு ரெக்கார்டு வைத்துக் கொள்ளுங் கள். உதாரணத்துக்கு உங்கள் தொழிலில் வேலை செய்யும் உதவியாளரிடம் சில சரக்கை உங்கள் வாடிக்கையாளர் களுக்கு கொடுத்து அனுப்பு கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

எடுத்துச் செல்லும் உங்கள் உதவியாளரிடம் ஒரு அக்னா லட்ஜ்மெண்ட் (acknowledgement) காகிதத்தையும் கொடுத்து அனுப் புங்கள். உங்களது உதவியாளர், உங்கள் வாடிக்கையாளரிடம் சரக்கைக் கொடுத்த பிறகு டெலிவரி செய்ததற்கு அடை யாளமாக, உங்கள் வாடிக்கை யாளர் நீங்கள் கொடுத்த அனுப்பிய அக்னாலட்ஜ்மெண்ட் காகிதத்தில் கையெழுத்திட்டு சீல் போட்டு வாங்கி வரட்டும். அந்த அக்னாலட்ஜ்மெண்டை உங்கள் ஃபைல்களில் வைத்துக் கொள்ளுங்கள். இது போன்ற சின்ன சின்ன செயல்களை செய்யும் பொழுது உங்கள் தொழிலில் பிரச்சினை இல்லாமல் சுமுகமாக நடக்கும்.

prakala@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x