Published : 18 Jun 2017 11:20 AM
Last Updated : 18 Jun 2017 11:20 AM
பங்குச் சந்தைகளில் ஏற்றம் தொடர்வதால், அது தொடர்புடைய மற்ற துறைகளிலும் ஏற்றம் இருந்து வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் பிரபலமாக இருக்கும் தள்ளுபடி புரோக்கிங் மாடல் (discount broking) இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. இந்த பிரிவில் ஏற்கெனவே பல நிறுவனங்கள் இருந் தாலும் ஐஐஎப்எல் குழுமம் 5பைசா டாட் காம் என்னும் நிறுவனத்தை ஓர் ஆண்டுக்கு முன்பு தொடங்கியது. இந்த நிலையில் 5பைசா டாட் காம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பிரகாஷ் கக்தானி (Prakarsh Gagdani) சென்னை வந்திருந்தார். புரோக்கிங், பங்குச் சந்தை உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து உரையாடினோம். அந்த உரையாடலில் இருந்து…
இந்த பிரிவில் ஏற்கெனவே பல நிறுவனங்கள் செயல்பட்டு வரும் போது உங்களால் இந்த சந்தையை பிடிக்க முடியுமா?
இந்த பிரிவில் பல நிறுவனங் கள் இருந்தாலும் ஜெரோதா நிறு வனத்தை தவிர மற்ற நிறுவனங் களிடம் பெரிய சந்தை இல்லை. முதல் இடத்துக்கும் அடுத்த இடத்துக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் பல நிறுவனங்கள் வைத்திருக்கின்றன. நாங்கள் கடைசியாக வந்தாலும் ஐஐஎப்எல் பிராண்ட், தொழில்நுட்பம் உள்ளிட்டவை எங்களுக்கு சாதகமாக இருக்கின்றன. தவிர நாங்கள் ஒரு வர்த்தகத்துக்கு ரூ.10 மட்டுமே வாங்குகிறோம் என்பதால் எங்களின் வளர்ச்சி நன்றாக இருக்கிறது. இதுவரை 15 வர்த்தகர்கள் இருக்கிறார்கள். நடப்பு நிதி ஆண்டு முடிவில் ஒரு லட்சம் வாடிக்கையாளர்கள் எங்களிடம் இருப்பார்கள். மேலும் இன்னும் சில ஆண்டுகளில் முதல் ஐந்து இடத்தில் இருப்போம் என்னும் நம்பிக்கை இருக்கிறது.
மியூச்சுவல் பண்ட்களை ஆன் லைனில் விற்பதற்காக பிரத்யேக நிறு வனங்கள் இருக்கும்போது உங்கள் தளத்தில் யார் முதலீடு செய்வார்கள்?
இந்த துறையில் பல நிறுவனங் கள் இருந்தாலும் நாங்கள் பிரத் யேகமான சேவையை வழங்கு கிறோம். சில ஆன்லைன் நிறுவனங் களில் அனைத்து வகையான மியூச்சுவல் பண்ட்களையும் வாங்க முடியும். சில ஆன்லைன் நிறுவனங்களில் ஒவ்வொரு பிரிவிலும் சில பண்ட்களை மட்டும் பரிந்துரை செய்வார்கள். ஆனால் நாங்கள் வாடிக்கையாளரின் ரிஸ்க், அவரின் தேவை என்பதை அடிப்படையாக வைத்து அவர் களுக்கு பண்ட்களை பரிந்துரை செய்கிறோம். இந்த ரோபோ அட்வைசரிக்காக முதலீட்டாளர்கள் எங்களிடம் வருவார்கள்.
வங்கிகளில் புரோக்கிங் பிரிவில் இருக்கிறார்கள். அவர்களிடம் பங்குகளை வாங்க முடியும். பணப்பரிமாற்றங்கள் எளிமையாக செய்துகொள்ள முடியும். அதனால் எதிர்காலத்தில் புரோக்கிங் பிரிவு முழுமையாக வங்கிகளுக்கு செல்லும் என்னும் கணிப்பு இருக்கிறதே?
அப்படி நடக்க வாய்ப்பு இல்லை. உதாரணமாக வங்கிகள் தங்கம், வீட்டுக்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களையும் வழங்குகின்றன. ஆனாலும் தங்க நகைக் கடனுக்கென பிரத்யேக நிறுவனங்களுக்கும், வீட்டுக் கடனுக்கென பிரத்யேக நிறுவனங்களுக்கும் சந்தையில் தேவை இருந்து வருகின்றன. அவை சிறப்பாகவும் செயல்படுகின்றன. அதுபோல எங்களை போன்ற டிஸ்கவுன்ட் புரோக்கிங் நிறுவனங்களுக்கான தேவையும் இருக்கும். வங்கிகளுக்கு புரோக்கிங் என்பது பல பிரிவுகளில் ஒன்று. ஆனால் எங்களுக்கு இதுதான் அனைத்தும் என்பதால் எங்களை போன்ற சேவைகளை அவர்களால் வழங்க முடியாது.
சந்தையில் ஏற்றம் இருக்கும் வரைதான் வர்த்தகர்கள் இருப்பார் கள். ஒரு சிறிவு சரிவு வந்தாலும் அவர்கள்வெளியேறிவிடுவார்கள். உங்கள் கணிப்பில் சந்தை எப்படி இருக்கிறது?
சந்தை சரிந்தால் வர்த்தகர்கள் சிறிது காலம் பங்குச் சந்தையில் இருந்து விலகி இருப்பார்களே தவிர மொத்தமாக சந்தையில் இருந்து விலக மாட்டார்கள். 2006/07-ம் ஆண்டுகளில் சந்தையில் அதீத உற்சாகம் இருந்தது. ஆனால் தற்போது நீண்ட கால ஏற்றத்துக்கான ஆரம்பம் தொடங்கி இருக்கிறது. சிறிய சரிவுகள் வந்தாலும் அடுத்த 18 மாதங்களுக்கு ஏற்றம் இருக்கும். 2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகளை பொறுத்தே பங்குச் சந்தையின் அடுத்த கட்ட ஏற்றம் இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT