Published : 12 Aug 2016 08:46 PM
Last Updated : 12 Aug 2016 08:46 PM
7-வது ஊதியக் குழு பரிந்துரையால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்ந்துள்ளது. 1 கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இதன் கீழ் பயனடைவதால் அதிகரித்துள்ள ஊதிய உயர்வை ஈடுசெய்வதற்கு இந்த நிதியாண்டில் கூடுதலாக நிதி அரசாங்கத்திற்கு தேவைப்படுகிறது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
2016-17 நிதியாண்டில் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்கு நிதி ஒதுக்குவதில் சில விரிவாக்க நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது என்று அருண் ஜேட்லி தெரிவித்தார். மேலும், இந்த நிதியாண்டில் ஜிடிபியில் 3.5 சதவீத நிதிப் பற்றாக்குறை இலக்கை அடைவதற்கு மத்திய அரசு நிறைய சவால்களை சந்தித்து வருகிறது. ஆனால் 2017-18ம் நிதியாண்டில் 3 சதவீத நிதிப் பற்றாக்குறை இலக்கை நிச்சயமாக அடைவோம் என உறுதியிட்டு சொல்கிறேன் என்று தெரிவித்தார்.
ஊதியம் அதிகரித்துள்ளதன் விளைவாக நுகர்வோரின் தேவையை ஊக்கப்படுத்தும். இதனால் பணவீக்கம் ஏற்படக்கூடிய நிலைமை ஏற்படலாம். இது அடுத்ததாக பதவியேற்ககூடிய ரிசர்வ் வங்கி கவர்னருக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று தர மதிப்பீட்டு நிறுவனமான மூடி’ஸ் சமீபத்தில் கருத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாட்டின் பணவீக்கத்தை அடுத்த 5 ஆண்டுகளில் 4 சதவீதமாக குறைக்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரிசர் வங்கியின் நிதிக் கொள்கையின் படி அது 2 சதவீதம் ஏற்ற இறக்கமாக இருக்கலாம்.
ஊதியம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றுக்கான ஒதுக்கீடு செய்யப்படுகிற நிதி இந்த நிதியாண்டை விட அடுத்த நிதியாண்டில் 10 சதவீதம் அதிகரிக்கும். அதாவது மொத்தம் 2,58,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும். -
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT